Misc

தவறுதலாக வங்கிக் கணக்கில் போட்ட பணத்தை இந்த நபர் என்ன பண்ணி இருக்கிறார் பாருங்க! நீங்கல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க!

Sep 17 2021 01:26:00 PM

பொதுவாக வங்கியில் பணம் போடும்போது சில நேரங்களில் வங்கி அதிகாரிகள் தவறுதலாக வேறு எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள். இது சில நேரங்களில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம். பீகார் மாநிலம் பாட்னா கிராம வங்கி ஒன்று தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்த ரஞ்சித் தாஸ் என்பவருக்கு தவறுதலாக 5.5 லட்சம் பணத்தை மாற்றி டெபாசிட் செய்துவிட்டனர்.

bihar ranjith money receive bank

பணம் தவறுதலாக அந்த நபருக்கு சென்றுவிட்டது என்பதை அந்த வங்கி தெரிந்து கொள்ள சில நாட்கள் ஆகிவிட்டது. நம்ம அக்கவுண்டுக்கு இவ்வளவு பணம் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் எல்லா காசையும் எடுத்து அந்த நபர் செலவு செய்துவிட்டார். அது உங்க காசு இல்ல, அந்த காச திருப்பி கொடுங்க என்று வங்கியில் இருந்து அவரிடம் கேட்டுள்ளனர்.

bihar ranjith money receive bank

நீங்க என்னுடைய அக்கவுண்டுல காசு தப்பா போட்டதுக்கு நான் என்ன பண்ணமுடியும், அது உங்க தப்பு, நான் எல்லா காசையும் செலவு பண்ணிட்டேன் என்று கூலாக சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் தரேன்னு சொன்னாருல்ல, அதோட முதல் தவணை தான் இந்த காசு என்று நினைத்து நான் செலவு பண்ணிட்டேன் என்றும் நக்கலாக சொல்லியுள்ளார்.

bihar ranjith money receive bank

உடனே இவர் மீது வழக்கு பதிவு செய்து சி*றையில் அடைத்துள்ளனர். காசை யாருக்கு கொடுக்கணுமோ அந்த நபருக்கு வங்கி ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து பணம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். வடிவேல் சொல்ற மாதிரி இதெல்லாம் சின்னப்புள்ள தனமால்ல இருக்கு என்று நெட்டிசன்கள் இந்த விஷயத்தை கிண்டல் செய்துவருகின்றனர்.

bihar ranjith money receive bank