#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா ?
  • 11:48AM Aug 19,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 11:48AM Aug 19,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ்  தொலைக்காட்சியான விஜய் டிவியில்  பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிவருகிறது . 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த 3 வது சீசனில்  பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி என 7 போட்டியாளர்கள் அடுத்தடுத்து  வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில் கடந்த வாரம்  நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் . இந்நிகழ்ச்சி அமைதியாக சென்றுகொண்டிருந்தது விடுவாரா குசும்புக்காரன் பிக் பாஸ்   வனிதா என்ற  வில்லங்கத்தை விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்,

21 2.jpg

சும்மாவே ஆடும் வனிதா இப்போ பிக் பாஸ் அளித்த ஆதரவால் அடித்தீர்த்து வீட்டையே இரண்டாக்கிவிட்டார் இவரின் வில்லங்கத்தில்   நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், மது மீதா பிக்பாஸ் இல்லத்தில் இருந்து நேற்று முன் தினம் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறிய சாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் மதுமிதா பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்  மது தைரியமாக இருங்கள், அந்த ஆண்கள் கூட்டம் மற்றவர்களின் உணர்ச்சியை கிண்டல் செய்வது சரியல்ல,இதனால் வெறுப்பு, மனஅழுத்தம் உண்டாகிறது. இது தொடர்பாக விஜய் டிவி  கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top