#BiggBoss : சிங்கம் சிங்கிளாத்தான் வரும்- மதுமிதா
  • 10:07AM Jul 05,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 10:07AM Jul 05,2019 Tamil Nadu

விஜய் டிவியின் புகழ் பெற்ற பிக் பாஸ் சீசன் 3 தற்பொழுது அனல் தெறிக்க நடைபெற்று வருகிறது நித்தம் ஒரு பிரச்னை இடையே காதல் என்று ரசிகர்களை குதூகலப்படுத்துகிறதுதற்பொழுது மதுமிதாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகிவருகிறது அதற்க்கு காரணம் சில நாட்களுக்கு முன்  ஷெரின் கண்டபடி கத்திய போது அந்த சூழ்நிலையயை கூலாக  மதுமிதா ஹேன்டில் செய்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Opera Snapshot_2019-07-05_100254_www.facebook.com.png

தமிழ்பெண் என்று கூறிய ஒரே காரணத்திற்காக மதுமிதாவை (தமிழ் நாட்டில் தமிழ் பெண் என்று சொல்வது தவறு போல !) ஷெரின், அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா, வனிதா ஆகியோர் கட்டம் கட்டி வருகின்றனர்.10 வது எபிசோடில் ஷெரின், மதுமிதாவை மிக கடுமையான  சொற்களால் தாக்கினர் . எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உன் வீட்டில் கற்றுக்கொடுக்கவில்லையா? நீ ஒரு யூஸ்லஸ் என்றும் மதுமிதாவை படுகேவலமாக திட்டினார்.

ஆனால் அவற்றை பார்த்து கோபப்படாமல் மதுமிதா மிக பொறுமையாக, கூலாக அந்த பிரச்சனையை சமாளித்தார்  ,எங்கள் வீட்டில் கற்றுக்கொடுக்கவில்லை, நீ கற்றுக்கொடுஎன்று கூறியே ஷெரினை வெறுப்பேற்றினார் மதுமிதாஅதாவது அவர் விட்ட அம்பை அவரிடமே திருப்பி அனுப்பினார் மதுமிதாவின் இந்த நடவடிக்கை ரசிகர்களை கவர்ந்தது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மதுமிதா தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top