#Biggboss : பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர் !!!
  • 10:45AM Jul 05,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 10:45AM Jul 05,2019 Tamil Nadu

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது இந்த சண்டையின் உச்சக்கட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது ,அதாவது  மீரா மிதுன், மதுமிதா ஆகியோரிடம் சண்டை போட்டு வந்த வனிதா கேங் மதுமிதாவிடம் சண்டையிட்டனர்.வனிதாவின் தூண்டுதலால் மீரா மிதுன், முகென் ராவ் இருவரும் தங்களது நட்பினைப் பற்றி அனைவர் முன்னிலையில் பேசினர்,

Opera Snapshot_2019-07-05_100227_www.facebook.com.png

 மீரா மிதுனுக்கும் முகெனுக்கும் நடந்த உரையாடலை சாக்க்ஷி வேறு மாதிரியாக திரித்து கூறியதை புரிந்தும் புரியாதது போல அபிராமி, வனிதா மற்றும் ஷெரினிடம் வத்தி வைத்துள்ளார்.இப்பிரச்சனையை பெரிதாக்க விரும்பிய வனிதா விடுவாரா !! எல்லோரையும் வரவழைத்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார் அப்பொழுது அபிராமி ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் முன்னாள் , முகேனை என்னுடைய நண்பன். ஒரு வேளை நான் அவனை காதலிக்கிறேன் என்று நினைத்தால் அதனை அவனிடம் சொல்லிவிடுவேன்.

Opera Snapshot_2019-07-05_100240_www.facebook.com.png

இது எங்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனை. எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று கத்தி பேசினார் இந்தப் பிரச்சினையில் மீரா மிதுன் இவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க படுத்து தூங்கி விட்டார். இதனால் சம்பந்தமே இல்லாமல் மாட்டிக்கொண்ட மதுமிதாவிடம் எங்களை முகத்துக்கு பின்னாடி பேசுறவங்களை எங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று வனிதா கேங்  மதுமிதாவிடம் சண்டை போட்டனர்

ae0f7441e7ad29d8be1e970722fddf73.jpg

இதனை மற்ற ஹவுஸ் மெட்ஸ்களான  சேரன், சரவணன், சாண்டி, கவின், மோகன் வைத்யா, பாத்திமா பாபு, தர்ஷன் ஆகியோர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.வனிதா கேங் சண்டையை பார்த்த  பருத்திவீரன் சரவணன் கேமரா முன்பாக வந்து சாமி என்னால் இங்கு இருக்க முடியாது. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, எனக்குப் பதிலாக வேறு யாரையாவது கொண்டு வாங்க என்று புலம்பினார் 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top