#BiggBoss : பிக் பாஸ் மீது கோபத்தில் சனம் வெளியிட்ட பதிவு !!!
  • 12:06PM Sep 24,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 12:06PM Sep 24,2019 Tamil Nadu

பிரபல தனியார்  தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி  91  நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சிலவாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில்  ஒருவராக கலந்துகொண்டுள்ள இலங்கையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகருமான தர்சன் இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடல் மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார்

sanam180719_3.jpg

இந்த சூழ்நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அப்பொழுது பிற போட்டியாளர்களை காப்பாற்ற விரும்பினால் மற்ற ஒரு போட்டியாளருக்கு  பச்சை மிளகாய் சாப்பிடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று  அனைத்து போட்டியாளர்களும்   செய்தனர். இந்நிலையில் தர்சன் தனது சக போட்டியாளர்களான  ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்ற 2 பச்சை மிளகாய்கள்  சாப்பிட்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

WTF !! Its going to make him very sick!!! Come on Bigboss..really??? Not fair at all !!! I cant watch this #bigboss3 #unfairgames

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

இந்த கட்சியை பார்த்த   தர்சனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி மிகவும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் இது அவர் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top