#BiggBoss :ரேஷ்மாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா !!!
  • 11:56AM Jun 27,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:56AM Jun 27,2019 Tamil Nadu

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 வது நாளான நேற்று  மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது ஆனால் அதன் பிறகு சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஏனென்றால் லக்ஷ்வரி பட்ஜெட் டாஸ்க்  அவரவர் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை சொல்வதாக கொடுக்கப்பட்டது

reshma3.jpg

இதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில்  ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியது முதல் திருமணம் தனக்கு மிகச்சிறுவயதில் நடந்ததாகவும் பிறகு அந்த திருமணம்  தோல்வி அடைந்ததாகவும் தன்னை அடிமை போல் கணவர் நடத்தியதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்டதாகவும் கூறிய ரேஷ்மா, அதன்பின்னர் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்

reshma4.jpeg

முதலில் நல்லவர் போல் தெரிந்த இரண்டாவது கணவரான  அமெரிக்கரும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தனக்கு தெரிந்ததால் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று தனது இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் தன்னால் மறக்க முடியாத சம்பவமாக அவர் கூறியதாவது

reshma1.jpg

தனது வயிற்றில் ஐந்து மாச குழந்தை  குறைப்பிரசவத்துடன் பிறந்தது என்றும் குழந்தை வெளியே வரும்போது தனக்கு யாருமே உதவிக்கு வராததால் தானே காரை எடுத்து கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றதாகவும் ஓரிரு மாதங்கள் இன்குபேட்டரில் இருந்த அந்த குழந்தைதான் தற்போது தனக்கு ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.ரேஷ்மாவின் சோகக்கதை பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் பரிதாபமாக இருந்தது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top