#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது ?
  • 11:02AM Aug 19,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 11:02AM Aug 19,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள மதுமிதாவின் தனது கைகளை தானே காயப்படுத்திக்கொண்ட நிகழ்வுதான் கடந்த இரு தினங்களாக வைரலாகி வருகிறது இந்த நிகழ்வு பற்றி நமது வலைதளத்தில் சனிக்கிழமை காலையிலேயே ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம் அதை படிக்காதவர்கள்  |இங்கே கிளிக் செய்யவும் |முதலில் மதுமிதா பற்றி சமுகவலைத்தளங்களில் வரும் மூன்று  பதிவுகளை பற்றி பார்ப்போம்

mathu issue.jpg

முதல் பதிவு இது நடிகை நளினியின் மகள் அருணா அவர்கள் வெளியிட்டது அந்த பதிவில் அவர் கூறியிருப்பது பிக்பாஸ் வீட்டினுள் மதுமிதா ஹலோ ஆப் டாஸ்க்கிற்காக எதார்த்தமாக  வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளார் பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் கர்நாடகத்தை சேர்ந்தவர், என்பதாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஷேரினை குறிவைத்துதான் மதுமிதா பேசியுள்ளார் என நினைத்துக்கொண்டு  மதுமிதாவை கிண்டல் செய்துள்ளனர் என்றும், மேலும் அனைவரும் (சேரன் மற்றும் கஸ்தூரி தவிற ) ஒன்று சேர்ந்து மதுவை திட்டியதால் மது இந்த முடிவிற்கு வந்ததாக கூறியுள்ளார்

mathu issue 1.jpg

இரண்டாவது பதிவு யார் வெளியிட்டது என்று தெரியாமல் இந்த தகவலை ஒரு புகைப்படமாவே வெளியிட்டுள்ளனர் இதனை பலரும் பகிர்ந்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தத்தக்கது அந்த புகை படத்தை அப்படியே வெளியிட்டுளோம்

mathu issue 2.jpg

மூன்றவது பதிவு Bigg Boss Tamil Troll என்கிற முகநூல் பேஜ் வெளியிட்டுள்ளது அதனையும் இங்கு அப்படியே வெளியிட்டுள்ளோம்

சமூக வலைத்தளங்கள் முழுவதும் பல தகவல்கள் உலவருகிறது அதில் இந்த 3பதிவுகளும் முக்கியமாக பலரால் பகிரப்படுவதால் அதனை இங்கு வெளியிட்டுளோம் சரி விசயத்திற்கு வருவோம் கமலஹாசனின் விருமாண்டி படத்தில் வருவது போல இந்த சம்பவத்தை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றார் போல் சொல்லியுள்ளனர் அவ்வளவே இதில் உள்ள பொதுவான விஷங்கள் மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது அப்படி இதில் உள்ள பொதுவான விஷயம் 1.ஹலோ ஆப் டாஸ்க்கிற்காக எதார்த்தமாக  வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளது  2.இந்த விஷயத்தில் ஷெரீனுக்கும் மதுவிற்கும் தான் முதலில் பிரச்னை ஆரம்பித்துள்ளது 3.சேரன் மற்றும் கஸ்தூரி மட்டுமே இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பாமல் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர் 4.சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அங்குள்ள மற்ற போட்டியாளர்களான கவின்,சாண்டி,லொஸ்லியா உள்பட அனைவரும் மதுவிற்கு எதிராக இருந்துள்ளனர் அதாவது மதுவை வெறுப்பேற்றியுள்ளனர்  இது தான் நடந்தது என்று விஜய் டீவியை தவிற யாருமே 100 சதவீதம் உண்மையை சொல்ல முடியாது ஆனால் ஓரளவிற்கு இதில் உள்ள உண்மைகளை நம்மால் உணரமுடியும் அது தான் இந்த பதிவு

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top