#BiggBoss : தந்தை சொல்லை மதிக்காத லொஸ்லியா !!!
  • 17:08PM Sep 23,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 17:08PM Sep 23,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் ,இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மரிய நேசன் இவரை ஆரம்பத்தில் மக்கள் எந்தளவிற்கு விரும்பினார்களோ அந்தளவிற்கு இவரின் ஓவர் ஆட்டிட்யூட் காரணமாக வெறுத்து வருகிறார்கள்

kal.jpg

அதுவும் குறிப்பாக இவர் வார இறுதி நாள்களில் நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான கமல் ஹாசன் முன்பு கால் மேல் கால்போட்டு ஆட்டியபடியே திமிராக பதில் சொன்ன லொஸ்லியாவை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய ஞாயிறு எபிசோடில் கடந்த வாரம் நடைபெற்ற சாயம் வெளுத்து போச்சு என்ற டாஸ்க் குறித்து கமல்ஹாசன் பேசினார் . அப்போது யாருக்கு யார் என்ன காரணம் கூறி நிறத்தை ஊற்றினார்கள் என்பது குறித்து விவாதித்தார்.

kal1.jpg

அப்போது கமல் ஹாசனின் கேள்விகளுக்கு  கால் மேல் கால் போட்டுக்கொண்டும் அதனை ஆட்டியபடியும் மிகவும் திமிராக பதில் சொன்னார் லொஸ்லியா.மேலும் தன்னை ஒரு  பெரிய செலிபிரிட்டி போல் பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தி  ஷோல்டரை தூக்கி பந்தாவாக கமலிடம்  பேசினார் லொஸ்லியா.லொஸ்லியாவின் இந்த  நடவடிக்கையை கண்ட ரசிகர்கள்  அவரை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.

kal2.jpg

ஏற்கனவே லொஸ்லியாவின் தந்தை மரிய நேசன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது கமல் சார் முன்பு கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருக்காதே என்று  அறிவுரை கூறினார்.ஆனால் அதனை கொஞ்சமும் மதிக்காத லொஸ்லியா நாளுக்கு நாள் மிக மோசமாக நடந்துகொள்கிறார். நாளுக்கு நாள் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. அதிக ஆட்டிட்யூட் காட்டி வந்த லாஸ்லியா தற்போது அரோகென்ட்டாகவும் மாறிவிட்டார் என்கின்றனர் நெட்டிசன்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top