#BiggBoss : தில்லு முள்ளு பண்ணி ஜெயித்தாரா மது மிதா !!!
  • 13:59PM Aug 17,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 13:59PM Aug 17,2019 Tamil Nadu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த லக்சுவரி பட்ஜெட் டாஸ்கில் சிறந்து விளங்கிய போட்டியாளர்களான  மதுமிதா ,தர்சன் மற்றும் ஷெரீனை  ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.  இவர்கள் மூவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று பிக்  பாசால் அறிவிக்கப்பட்டது.இதன்படி நேற்று கேப்டன் டாஸ்க்கில் மதுமிதா, ஷெரின், தர்சன் ஆகிய மூவரும்  போட்டியிட்டனர்.  டாஸ்க் என்னவென்றால் மூவரும் கண்ணை கட்டிக்கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்தில் உள்ள CAPTAIN என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை சரியாக எடுத்து மறுமுனையில் உள்ள போர்டில் வைக்க வேண்டும்.

captian 1.jpg

இந்த போட்டியில் கண்கள்  கட்டப்பட்டிருந்தால் ஷெரின் மற்றும் , தர்சன் ஆகிய இருவரும்  ஒவ்வொரு எழுத்தையும் தடவித்தடவி எடுத்தனர். ஆனால் ச போட்டியாளரான மதுமிதா மட்டும் சரியாக தனக்கு கொடுக்கப்பட்ட  ஊதா  வண்ணத்தின் எழுத்துக்களை எடுத்தது மட்டுமின்றி எந்தவித சிரமமும்  இல்லாமல் ஒவ்வொரு  எழுத்துகளையும்  சரியாககுறிப்பிட்ட இடத்தில்  வைத்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் என்ற எழுத்து  பாக்ஸில் இருந்து வெளியே விழுந்தது  அந்த எழுத்தையும் தர்சனிடமிருந்து பிடுங்கி  மதுமிதா சரியாக வைத்தார் இது  பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது இந்த பரபரப்பான சூழ்நிலையில்  கண்ணை கட்டாமல் இருந்தால் கூட போட்டியாளர்கள் கொஞ்சம் சிரமப்படுவார்கள் . ஆனால் மதுமிதாவோ  கண்ணை கட்டியும் எப்படி எந்த சிரமும் இல்லாமல்  அனைத்து எழுத்தையும் சரியாக வைத்தார் என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top