#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் !!!
  • 02:41AM Jul 15,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 02:41AM Jul 15,2019 Tamil Nadu

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில்  இந்த சீசனுக்கான முதல் ஆர்மி அரம்பிக்கப்பட்டது இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா எனலாம்.  லாஷ்லியா பிக் பாஸ் வீட்டினுள்  உள்ளே வந்த முதல்  நாளே, இவருக்கு ஆர்மி துவங்கி மற்ற போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் லாஷ்லியா  ரசிகர்கள்.

bf85123f-b922-46c4-b0bf-0460c957df5d.jpg

லாஷ்லியாவை பற்றி பல விமர்சனங்கள் வருகிறது குறிப்பாக இவர் சேஃப் கேம் விளையாடுவதாக சிலர் கூறி வந்தாலும், லாஷ்லியா புறம் பேசுதல், மற்றும் சண்டை போடாமல் நிதானமாக இருப்பதால்  இவருக்கு பலர் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் .  அதே போல் அவ்வப்போது இவர்  பாடும் பாடல், மற்றும் டான்ஸ் ஆகியவை ரசிகர்களை கவர்ந்து  வருகிறது.

fec4b871-7d8f-44b6-99cd-3dab9895d4e8.jpg

சமீபத்தில் லாஷ்லியாவை பற்றி ஒரு யூ டுயூப் சேனலுக்கு பேட்டியளித்த நடன இயக்குனரும் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவருமான கலா மாஸ்டர் லாஸ்லியாவின் சின்ன சின்ன அங்க அசைவுகளும் அழகாக இருக்கிறது. கண் சிமட்டுவது பலரையும் ஈர்க்கிறது. நடனம் நன்றாக ஆடுகிறார்.என்று புகழ்ந்துள்ளார்

choreographer-kala-inaugurates-a-a-boutique-show-room-7.jpg

மேலும் கலா மாஸ்டர் ஒரு ஹீரோயின் ஆவதற்கான அனைத்து அம்சங்களும் லாஷ்லியாவிடம் உள்ளது. எனவே அவருக்கு தமிழ் சினிமாவில்  வாய்ப்புகள் வரும். லாஸ்லியா ஆர்மி லாஷ்லியாவிற்கு பிக்பாஸ்க்கும் மட்டும் ஆதரவு கொடுப்பதோடு இருந்து விடாமல் அவரது திரையுலக வாழ்க்கையிலும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top