#BiggBoss : இந்த வாரம் வெளியேறுபவர் யார் முன்னாள் பிக் பாஸ் பிரபலத்தின் கணிப்பு !!!
  • 10:08AM Jul 06,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 10:08AM Jul 06,2019 Tamil Nadu

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது,ஆரம்பம் முதலே பல சண்டை சச்சரவுகள் இடையிடையே காதல் என்று சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் அந்த நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து  வருகிறார் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான  காஜல் . பிக் பாஸ் முதல் சீசன்னில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக  பங்குக்கேற்ற காஜல்  ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கினாரோ இல்லையோ கேட்ட பெயர் வாங்கவில்லை

bigboss67-1562140336.jpg

தற்பொழுது பட வாய்ப்புகளோ ,தொலைக்காட்சிகளோ அவ்வளவாக இல்லாததால்    பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோட் விடாமல் பார்த்து அதனை பற்றி தனது பாணியில் ட்விட்டரில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்,இவரின் முன்னாள் கணவர் தான் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றுள்ள டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இதில் 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் முறையே   பாத்திமா, சேரன், கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா கவின், இதில்  இந்த வார பிக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

64562468_1144753182392599_8366603688541683712_n.jpg

இந்நிலையில் இது குறித்து காஜல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'இதில் முதல் ஆளாக பாத்திமா பாபுவை  அனுப்பிவிடுவார்கள். ஏனென்றால் அவர் கண்டெண்ட் எதுவும் கொடுப்பதில்லை, தற்போது மீரா தான் கன்டன்ட் கொடுக்கிறார். எனவே, பாத்திமாவை தான் அனுப்புவார்கள்' என்று கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top