#Bigg Boss : காதலரை கரம்பிடித்தார் பிக் பாஸ் வைஷ்ணவி!!!
  • 07:43AM Jun 17,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 07:43AM Jun 17,2019 Chennai

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான வைஷ்ணவி, தற்போது தன்னுடைய மூன்று வருட காதலர் அஞ்சன் என்பவரை, மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்,எழுத்தாளர் சாவியின் பேத்தியும் பிக்பாஸ் சீஸன் 2 போட்டியாளருமான ஆர்ஜே வைஷ்ணவிக்கு  சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

vai.jpg

கடந்த வருடம் 'பிக்பாஸ்' தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஒருவரைப் பற்றி மற்றொரு நபரிடம் புறம் பேசுவதால் நாரதர்  என மக்களால் விமர்சிக்கப்பட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து 63 நாட்களுக்கு பிறகு  வெளியேற்றப்பட்ட வைஷ்ணவி அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் உரையாடி வந்தார்,

மேலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். சில நாட்கள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நீண்டநாள் காதலரான அஞ்சன் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அது இணையத்தில் வைரலாக பரவியது.இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைஷ்ணவி அஞ்சன் திருமணம் நடந்துள்ளது. இதை வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்து படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் காதலை நிருபிக்க பிரம்மாண்ட விழா தேவையில்ல . நாங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் எங்கள் காதலை நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி மற்றும் அஞ்சன் திருமணம் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top