பிக்பாஸில் எல்லோரது உள்ளத்தையும் கொ ள்ளை கொண்ட ஓவியா கூட, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் பெரும் ஹிட் படங்களை கொடுக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் ரைசா, அமைதியாக அடுத்தடுத்த படங்களை கொடுத்து கொண்டே இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் 'சூர்ப்பனகை' படத்தின் ஷூட்டிங்கை முடித்தார். இந்த ஆண்டு ரைசா கண்டிப்பாக கோடம்பாக்கம் பேசும் ஹீரோயினாக வருவார்.
சூர்ப்பனகை படத்தை தொடர்ந்து நாலு ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளாராம் ரைசா. பியார் பிரேமா படத்தில் ரைசாவின் படுக்கை அறை காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
பின்ன பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடனே, அதிரடியாக படுக்கை அறை காட்சிகளில் நடித்தால், ஒருவித இன்ப அதிர்ச்சி இருக்குமா இருக்காதா? பிக்பாஸ் வீட்டில் பவ்யமாக இருந்த ரைசாவா இது? என பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இருப்பினும் அந்தப்படம் ரைசாவிற்கு பெரும் திருப்பு முனையாக அமையவில்லை. ஆனால் 'சூர்ப்பனகை' படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ரைசாவிற்கு ரசிகர்கள் பட்டாளத்திக்கு எந்த குறைச்சலும் இல்லை. ரைசாவும் தான் எந்த படத்தில் நடிக்க உள்ளது என்பது குறித்த அப்டேட்டுகளை உடனே வெளியிடுவதால், ரசிகர்களும் இவரை வாழ்த்துகின்றனர். ரைசாவும் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார். இப்படி ஏதோ ஒரு வகையில் ரசிகர்களுடன் அன்பை பகிர்ந்து வருகிறார்.
எல்லா இடத்திலும் வில்லன் இருப்பது போல் இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஏதாவது பதிவை போட்டால் அதை கலாய்க்கவும் ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. அப்படித்தான் புடவை கட்டியுள்ள புகைப்படத்திற்கு, இடுப்பு மடிப்பு கட்டுக்குள் அடங்காமல் வெளியே தெரிய, அதனை நக்கலாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சில இணையத்தள வாசிகள்.