#Bigg Boss: படுக்கை பங்காளிகளாக காட்டுவதா? நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் - வெளியான அதிர்ச்சி தகவல்!
  • 12:31PM Oct 12,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:31PM Oct 12,2019 India

இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘bigg boss 13’ நிகழ்ச்சி கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் ‘Indian reality TV series Bigg Boss’ன் 13-வது சீசன் நிகழ்ச்சிகளை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘bigg boss 13’ உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென Navnirman Sena என்ற  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உத்தரப்பிரதேச Navnirman Sena தலைவர் அமித் ஜானி என்பவர், ‘bigg boss 13’ நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த உணவு சாப்பிட மாட்டேன் என்று பட்டினிப் போராட்டம் அறிவித்துள்ளார்.

சல்மான் கான் நடத்திவரும் bigg boss reality show மிகப்பெரிய கலாச்சார கேட்டை விளைவிப்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, கூறியுள்ளார். இதுதொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். இந்த நிகழ்ச்சி மிகவும் ஆட்சேபணைக்குரிய நெருக்கமான படுக்கைக் காட்சிகள் கொண்டுள்ளது.

இதில் வேறுபட்ட சமூகத்தைச்சார்ந்தவர்கள் படுக்கை பங்காளிகளாக காட்டப்படுகிறார்கள். அதன்மூலம் எப்போதைக்குமான படுக்கை நண்பர்கள் என்ற கருத்தாக்கம் ஒன்றையும் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top