Shoreline

இது என்ன பூச்சியா இல்ல பெருச்சாளியா? கேள்விப்படாத பூச்சி ஒன்றின் சேட்டையால் ஆச்சர்யமடைந்த பள்ளி மாணவர்கள்!

May 27 2021 06:49:00 PM

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளி ஒன்றில் ராட்சத அளவிலான மர அந்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சியை விட்டில் பூச்சி என்றும் அழைக்கலாம். மிகவும் அரிதாக எப்போதாவது மட்டுமே மனிதர்களின் கண்ணில் படும் இந்த பூச்சியை அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வியந்து பார்த்து ரசித்தனர்.

wood-mooth australia-school

தெற்கு குயின்ஸ்லாந்தின் ரெட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் காட்டன் ஸ்டேட் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டும்போது கட்டுமான தொழிலார்கள் இந்த பூச்சியை கண்டுபிடித்தனர். அளவில் பெரிதாக இருந்த இந்த பூச்சி மிக கனமாகவும் இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு எலி அளவுக்கு பெரிதாக இருந்த அந்த பூச்சியால் பறக்க முடியவில்லை. இந்த பூச்சியை ஆராய்ச்சி செய்த நிபுணர்கள் இது பெண் பூச்சியாக இருக்கலாம் என்று கூறினர்.

wood-mooth australia-school

இந்த பூச்சி இனத்தில் மிகப்பெரிய பூச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது 30 கிராம் எடை இருந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரை பகுதிகளில் இந்த மர அந்துப்பூச்சி பொதுவாக காணப்படும் என்றும் மனிதர்கள் கண்ணில் அதிகம் பட்டது கிடையாது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

wood-mooth australia-school

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 60 வகையான மர அந்துப்பூச்சிகள் இருக்கிறது. பள்ளியின் புதிய கட்டிடம் மழைக்காடுகளுக்கு அருகில் கட்டப்படுவதால் இந்த பூச்சியை எளிதாக காண முடிந்திருக்கிறது. இந்த அரியவகை அந்துப்பூச்சியை பார்த்து ரசித்தவுடன் அதை ஒரு புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பள்ளி நிர்வாகம். அதன் பிறகு கட்டிட தொழிலார்கள் பத்திரமாக இந்த பூச்சியை மீண்டும் காட்டுக்குள் சென்று சேர்த்தனர்.