Misc

எந்த கெட்ட நேரமும் இந்த நேரத்தில் வராது ஏன் என்று தெரியுமா ?

Apr 28 2021 06:25:00 PM

பெரும்பாலும் வீட்டில் கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நேரம் பார்த்து செய்வது தான் வழக்கம். அப்படி பார்க்கும் போது ராகுகாலம், எமகண்டம் என்று பலவித நேரங்கள் வரும். அதில் சுபமாக இருக்கும் நேரம் பார்த்து தான் விசேஷங்கள் செய்வர். ஆனால் பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் விடியற்காலை நேரமானது எந்த தோஷமும் இல்லாத அற்புதமான நேரம் என்று கூறப்படுவதன் காரணம் உங்களுக்கு தெரியுமா?

bhramma-mugurtham

பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் விடியற்காலை நேரம் சூரிய உதயத்திற்கு முன் இருக்கும் நேரமாகும். இந்த நேரத்தில் தேவர்கள், மும்மூர்த்திகள், சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி தேவி போன்ற அனைத்து தெய்வங்களும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நேரமாகும். அதன் காரணமாகவே அந்த சமயத்தில் தூங்க கூடாது என்று கூறுவார்கள்.இந்த நேரத்தில் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியடையும். இந்த நேரத்தில் இறைவழிபாடு செய்வதினால் கோடி புண்ணியம் கிடைக்கப்பெறும்.

bhramma-mugurtham

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். இந்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு இறைவழிபாடு செய்து அன்றைய நாளை தொடங்குவதினால் நாள் முழுவதும் நமக்கு நல்லதே நடக்கும். குழந்தைகள் இந்த நேரத்தில் கல்வி பயின்றால் சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்கப்பெறுவர். அதிகாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரை உள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.