கிருஷ்ணனைக் கும்பிடுவதில் சிறந்த வழி என்ன தெரியுமா???
  • 06:13AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:13AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

நீங்கள் கிருஷ்ண பக்தரா??? கிருஷ்ணனை எந்த விதத்தில். எந்த ரூபத்தில் கும்பிடுவது நல்லதென்று உங்களுக்குத் தெரியுமா??? தெரியாவிட்டால் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்…  மற்ற கடவுள்களைப் போல் அல்லாமல் கிருஷ்ணனுக்கு மட்டும் பல்வேறு பருவங்களில் உருவகங்கள் உண்டு. குழந்தையாக, இளைஞனாக, ராதாகிருஷ்ணனாக, பாமா ருக்மணியுடன் லீலா விநோதன் ஆக – எனப் பலவாறு நாம் கிருஷ்ணனை தரிசித்திருப்போம்.  ஆனால். அதில் எந்தக் கிருஷ்ணன் மிகவும் செல்லக் கிருஷ்ணன் என்பது தெரியும்???

கிருஷ்ணனை வணங்குவதற்குச் சரியான பருவ உருவகம் பால கிருஷ்ணனே.  கண்ணனைக் குழந்தையாக உருவகப்படுத்திச் சுவீகரித்து, வீட்டில் வைத்துக் கும்பிடுவோரின் குடும்பத்தில் பல்வேறு அற்புதங்கள் நிகழும்.  நிற்க. குழந்தையாகச் சுவீகரித்து, என்பது சாதாரண கிருஷ்ணனை வழிபடுவது போல அல்ல - கடினமானது.  ஒரு குழந்தை இருந்தால் நீங்கள் எப்படியெல்லாம் கவனிப்பீர்களோ அப்படியெல்லாம் கவனிக்க வேண்டி இருக்கும். பொம்மை வைத்து குழந்தைகள் விளையாடுவதைப் போலத்தான் என்றாலும், குழந்தையாக இருக்கும் கிருஷ்ணன் எந்தக் கல்மிஷமும் இல்லாமல் உங்கள் அன்பை பூரணமாக பெற்று அனைத்து வளங்களையும் அளிப்பார்.

குறிப்பாக. கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி சமயத்தில் ஒற்றைப்படை இலக்கத்தில் அறுசுவை உணவு படைத்து, அபிஷேகம் முதற்கொண்டு செய்ய வேண்டியிருக்கும்.  கொல்கட்டாவில் ஒரு பிரபல மிட்டாய்க் கடை ஒன்றில் கோகுலாஷ்டமி அன்று ஒரு சிறுவன் நின்றிருந்தானாம்.  கடைக்காரர் கடை திறக்கும் வேளையில் அச்சிறுவனை கவனித்து என்ன வேண்டும் என்று கேட்கையில், ஒரு இனிப்பை சுட்டிக் காட்டினானாம்.  அவன் அழகைப் பார்த்த கடைக்காரர் இனிப்பைக் கொடுக்க, அந்த இனிப்பு பூரியில் உள்ள ஜகந்நாதர் கோவிலில் உள்ள மூலவர் சிலையில் இருந்ததாம். இதனால் இன்றளவும் அந்த குறிப்பிட்ட கடையில் இருந்து வருடா வருடம் அந்த ஒரு இனிப்பு மட்டும் கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அன்பையும் மகிழ்வையும் மட்டுமே பக்தர்களிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை, அது மிக அதிகமாகக் கிடைக்கும் குழந்தைப் பருவத்தை விட வேறு எந்தப் பருவத்தில் இருக்கும்போது அதிகமாக மகிழ்விக்க முடியும். பால கிருஷ்ணனை மகிழ்ச்சி மட்டும் கொண்டு பூஜியுங்கள்… அதுவே அவனுக்குச் செய்யும் மிகப் பெரிய பூஜை… 

 

Top