#support actors : சைடுல வந்தே நம்ம சாச்சுபுட்ட நடிகர், நடிகைகளை கொண்ட படம் - இவ்வளவு நுணுக்கம் இருக்கு.!
  • 21:14PM Jun 15,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:14PM Jun 15,2019 India

சிறந்த துணை நடிகர்கள் கொண்டத் திரைப்படம் பாகுபலி(The Beginning) 2015-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி மிக பிரம்மாண்டமாக எடுத்து இருப்பார்.படத்தின் நாயகனாக பிரபாஸும் நாயகியாக அனுஷ்காவும் தமன்னாவும் வில்லனாக ராணாவும் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்கள் .இந்த படத்தின் மற்ற துணை கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.அவர்களில் நான்கு முக்கியமான நபர்களை பற்றி பார்ப்போம்.

சத்யராஜ்(கட்டப்பா): மகிழ்மதி அரச குடும்பத்தின் விசுவாசமான அடிமையாக காவல்காரனாக சிவகாமி தேவியின் அரணாக நடித்திருப்பார்.பின்னர் அரசன் கெட்டவனாக இருந்தாலும் அவருக்கு நன்றியோடு உழைக்கும் நல்ல ஊழியனாக நடித்திருப்பார்.

ரம்யா கிருஷ்ணன்(சிவகாமி தேவி ): அமரேந்திர பாகுபலியின் வளர்ப்பு தாயாகவும் மகிழ்மதி நாட்டின் ராஜமாதாவாகவும் சிறப்பாக நடித்திருப்பார்.இந்த படத்தில் தன் நடிப்பில் தனி முத்திரை பதித்து இருக்கிறார். இவர் பேசும் அனைத்து வசனங்களும் திரையரங்கில் பலத்த கைதட்டல்களை பெற்றது.

நாசர்(பிங்கலதேவன்): சிவகாமி தேவியின் கணவராகவும் தன் மகன் அரசனாக வேண்டும் என்று சூழ்ச்சி செய்து பாகுபலியை வீழ்த்த துடிக்கும் தந்தையாக ஒரு மாற்றுதிறனாளி வேடத்தில் நடித்து இருப்பார்.

ரோகிணி(சங்கா): மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தாயாக நடித்து இருப்பார்.ஆற்றில் மிதக்கும் குழந்தையை எடுத்து பாசமாக வளர்க்கும் கதாபாத்திரம்.மற்ற படங்களை ஒப்பிடும் போது இந்த படத்திற்கு சிறந்த துணை நடிகர்கள் அமைந்து இருப்பதால் தான் இந்த படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளது .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top