#jaggery: கருப்பட்டியால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் !!!
  • 11:32AM Nov 09,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:32AM Nov 09,2019 Tamil Nadu

நம் முன்னோர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை நாம் மறந்ததால் தான் இன்று நமக்கு பல உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது,அதிலும் குறிப்பாக என்றைக்கு நாம் சீனி என்று சொல்லக்கூடிய வெள்ளை சர்க்கரையை பயன் படுத்த தொடங்கினோமோ அன்றிலிருந்து தான் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம்,இன்று பலரும் நமது பாரம்பரிய உணவுகள் பக்கம் திரும்பி வர ஆரம்பித்து விட்டார்கள்,அப்படி நம் முன்னோரர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட கருப்பட்டி என்கிற பனை வெல்லத்தை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

palm 1.jpg

நம்மில் நிறைய பேருக்கு  கருப்பட்டி மற்றும் வெல்லம் வேறுபாடு தெரியாது !,அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம் வெள்ளம் தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது   கருப்பட்டி பனை மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது ஆனால் ஆங்கிலத்தில் இது இரண்டையும் ஒரே பெயரில் Jaggery என்று ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள் அத்தையையும் ,சித்தியையும் Aunty என்று சொல்வதுபோல.

palm.jpg

கருப்பட்டியில்  இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. மேலும் கருப்பட்டியில்    பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் போன்ற சத்துக்கள் இருக்கிறது, இதில் உள்ள மெக்னிஷியம் எனும் சத்து நரம்புகளை  உறுதியாக்கிறது , எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் சிறிது கருப்பட்டியை  தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். 

palm2.jpg

பெண்களுக்கு மாதவிலக்கு  பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும்படபடப்பாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் கருப்பட்டி  சிறிது சாப்பிட்டாலே இந்த பிரச்னை தீர்ந்துவிடும் .கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு கருப்பட்டி  ஒரு வரப்பிரசாதம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top