#Butter Milk : மோர் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகளா !!!
  • 12:31PM Nov 06,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:31PM Nov 06,2019 Tamil Nadu

நம் முன்னோர்கள் தங்கள்  வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு மோர் கொடுப்பார்கள். சொல்லப்போனால் அக்காலத்தில் மோர் இல்லாத வீடுகளே இருக்காது. மேலும் பால் பொருட்களிலேயே மோர் தான் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.அதுவும் மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இப்படிப்பட்ட  மோரை தினமும்  குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

butter milk.jpg

அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவில் , மோரில் கொலஸ்ட்ராலை குறைவாக பராமரிக்க உதவும் பயனுள்ள மூலக்கூறுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களின் பரிசோதனைக்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள்  ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

buttermilk-625_625x350_51442899881.jpg

மேலும் மோர் குடிப்பதால்  அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்சு  எரிச்சலை போக்கும், மேலும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். உடல் ஏற்படும் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top