Timeless

பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு திருவிழா கொண்டாடுவதா? வீட்டுக்காரம்மா காதுக்கு இந்த மேட்டர் போனால் என்ன நடக்கும் தெரியுமா?

Oct 03 2021 05:52:00 PM

நம்ம ஊருல பீர் பாட்டிலை வச்சிக்கிட்டு திருவிழா கொண்டாட முடியாதுங்க. வீட்டுல தெரிஞ்சா அவ்வளவு தான். தோலை உறிச்சி தொங்க விட்டுருவாங்க. ஆனால் வெளிநாடுகளில் தான் கலாச்சாரம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறதே. பின்லாந்து நாட்டில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட கூத்தெல்லாம் அடிக்கிறாங்க தெரியுமா?

beer-boat-festival finland-culture

பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக படுத்திருக்கும் சுகமே சுகம் தாங்க. அந்த சுகத்தை பின்லாந்து நாட்டு மக்கள் நன்றாகவே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் பீர் மிதத்தல் திருவிழா என்ற பெயரில் நடக்கும் விழாவில் 5000 பேருக்கும் மேல் கலந்து கொள்கின்றனர்.

beer-boat-festival finland-culture

நதிகளில் மிதக்கும் படகுகளில் அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக கையில் பீர் பாட்டிலுடன் ஆண்களும் பெண்களும் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் ஆனந்தமாக பொழுதை கழிக்கின்றனர். பீர் அடித்துக்கொண்டு தண்ணீரில் மிதக்கும் இந்த திருவிழாவை கல்ஜாகெல்லுண்டோ என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.  இந்தப்பெயர் நம் வாயில் நுழைவது கடினம்.

beer-boat-festival finland-culture

இந்த திருவிழா சூப்பரான திருவிழாவாக இருக்கே என்று உங்களுக்கு தோன்றும். ஆமாங்க ஒரு பக்கம் பீர், இன்னொரு பக்கம் சூரிய வெளிச்சம், மிதக்கும் படகு, எல்லாத்துக்கும் மேல கூடவே இருந்து ஊத்திக்கொடுத்து ஆட்டம் போடுவதற்கு பெண்கள் என்று இருந்தால் அது நிச்சயமாக சூப்பர் திருவிழா தானே. அவுங்க ஊருல ஆண்கள் பெண்கள் எல்லாம் சகஜமா பீர் அடிப்பாங்க. நம்ம ஊருல இப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

beer-boat-festival finland-culture

உங்க மனசுக்குள் பின்லாந்துல வசிக்கும் மக்கள் மீது ஒரு வித பொறாமை உருவாகியிருக்குமே? அவுங்க குடியும் குடுத்தனமுமா இருக்காங்களே. நம்மளால அப்படி என்ஜாய் பண்ண முடியலையே என்று உங்க மனசு பொங்கிக்கொண்டு இருக்கும். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதுக்காக என்ன பண்ண முடியும்? நம்ம ஊருக்கு இந்த மாதிரி திருவிழா செட் ஆகாதுங்க அவ்வளவுதான்.