பெண்கள் கார் ஓட்டுவது எல்லாம் சும்மா.. கையில் ஒரு பிளைட்ட கொடுத்து பாருங்களேன்.. உலக நாடுகளை மிரள வைத்த பெண்..!
  • 12:25PM Mar 08,2019 France
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:25PM Mar 08,2019 France

your image

 

1910 ஆம் ஆண்டும் பிரான்சின் Raymonde de Laroche. Raymonde de Laroche விமானம் ஓட்டும் உரிமம் பெற்று, உலகின் முதல் பெண் விமானியானார். International Aeronautics Federation இந்த உரிமத்தை வழங்கியது. சார்லஸ் வாய்சின் என்ற விமானி நண்பரிடம் 1909இல் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார் டி-லாரோச்.

வாய்சினிடமிருந்த விமானத்தில் ஒருவர் மட்டுமே அமரமுடியும் என்பதால், அவர் தரையிலிருந்தபடி சொல்லச்சொல்ல, டி-லாரோச் விமானத்தை இயக்கியிருக்கிறார். 1910 ஜூலையில் ரெய்ம்ஸ் நகரில் நடைபெற்ற விமானக் காட்சியில் இவரது விமானம் விழுந்து நொறுங்கியதில், குணப்படுத்த முடியாது எனுமளவுக்கு மிகமோசமாகக் காயமடைந்தார் டி-லாரோச்.

ஆனாலும், இரண்டாண்டுகளில் தேறி மீண்டும் விமானம் ஓட்டினார். ஆனால், 1912இல் ஒரு கார் விபத்தில் சிக்கினார். உடன் பயணித்த வாய்சின் பலியாகிவிட, டி-லாரோச் படுகாயமடைந்தார். அதிலிருந்தும் மீண்டுவந்து, 1913 நவம்பரில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தில் பறந்து சாதனை புரிந்தார். எகிப்து, ஹங்கேரி, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விமானம் ஓட்டுதல் குறித்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அழைக்கப்பட்டார்.

ரஷ்யாவில் பங்கேற்றபோது, ஜார் இரண்டாம் நிக்கோலஸ் அரசர் இவருக்கு கோமகள் என்று பட்டமளித்தார். முதல் உலகப்போரின்போது, ஆபத்தானதாகக் கருதப்பட்டதால் பெண்கள் விமானம் ஓட்ட அனுமதிக்கப்படாததால், போர்க்களத்தில் ராணுவ அலுவலர்களுக்கு ஓட்டுனராகப் பணிபுரிந்து, தாக்குதல்களுக்கிடையே வாகனம் ஓட்டினார்.

1919இல் அதிக உயரம் பறத்தல், அதிக தூரம் பறத்தல் ஆகிய சாதனைகளை நிகழ்த்தினார். அனுபவமிக்க விமானப் பொறியாளகிவிட்டிருந்த டி-லாரோச், அதிக அனுபவம் தேவைப்படும் பணியான புதிய விமானங்களை ஓட்டும் சோதனை விமானியாகவும் ஆனார்.

முதல் பெண் சோதனை விமானியாக 1919 ஜூலை 18இல் அவர் ஓட்டிய விமானம் விழுந்து நொறுங்கியதில், அவரும், துணை விமானியும் பலியாயினர். டி-லாரோச்சுக்கு பாரிஸ்-லே-போர்ஜெட் விமான நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் விமானி உரிமம்பெற்றதன் நூற்றாண்டுவிழா 2010இல் கொண்டாடப்பட்டபோது, ஒரே வாரத்தில் 310 பெண்கள் விமானி உரிமம் பெற்றனர்.

#world first women pilot

Share This Story

முருகானந்தம்

Top