Timeless

நொடிக்கு நொடி எங்க ஊருல எல்லாம் போட்டு தாக்குவாங்க உங்களுக்கு ஒன்னுமே கிடைக்கலையா? ஆனா இவங்க பொய் சொல்லமாட்டாங்களே நிஜமாவே அப்படித்தான் நடந்ததா?

Jun 10 2021 08:21:00 AM

முக்கியச்செய்திகள் என்ற ஒரு வார்த்தையை வைத்து நம் நாட்டில் எத்தனை செய்திகளை ஊதி பெருசாக்கியிருக்கிறார்கள் தெரியுமா? அதுவும் இந்த பாழாப்போன கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் 24 மணி நேரமும் தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு முக்கியச்செய்திகள், அண்மைச்செய்திகள் என்று எல்லா சேனலையும் மாற்றி மாற்றி பார்த்து அலுத்துப்போய் விட்டார்கள். ஒரு சாதாரண செய்தியை கூட ஊடகங்கள் நினைத்தால் பெரிய விஷயமாக மாற்ற முடியும்.

bbc-breaking-news

தொலைக்காட்சியில் பல சேனல்கள் இருந்தாலும் இப்போது செய்தி சேனல்களை பார்ப்போரின் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம். நம்ம ஊரிலேயே நிலைமை இப்படி இருந்தால் உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பிபிசி நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பிபிசி நிறுவனம் 1930ம் ஆண்டு ஒரு நெருக்கடியான நிலைமையை சமாளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

bbc-breaking-news

1930ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி பிபிசி நிறுவனத்துக்கு எந்த செய்தியுமே கிடைக்கவில்லை. செய்தியே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று குழம்பிப்போன நிறுவன அதிகாரிகள் ஒரு வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்தார்கள். காலை 8.45 மணிக்கு வழக்கம்போல் ஒலிபரப்பாகும் செய்தி நிகழ்ச்சியில் ரேடியோவில் செய்தி வாசிப்பவர் இன்று எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. அதனால் மக்கள் அனைவரும் பியானோ இசையை கேட்டு மகிழுங்கள் என்று வாசித்துவிட்டு சென்றார். உலக வரலாற்றிலேயே செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதையே செய்தியாக சொல்லிய நிகழ்வு அப்போதுதான் முதல் முறையாக நடந்தது.

bbc-breaking-news