Rainforest

குளிக்கும் போதும் குளித்த பிறகும் இந்த செயல்களை செய்யாமல் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது இல்லையெனில் உங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படும்

Apr 19 2021 10:10:00 AM

உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி நம்மை புத்துணர்ச்சி மற்றும் தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக குளிக்கிறோம். தினமும் காலை மாலை என இரண்டு முறை குளிக்கலாம். குளிக்கும் போது நம்மை அறியாமல் செய்யும் சில செயல்கள் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அப்படி ஏற்படாமல் தடுக்க எந்தெந்த செயல்களை தடுப்பது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

bathing-benefits

சூடான நீரில் குளிப்பது உங்கள் முடி மற்றும் சருமத்தை வறட்சி அடையச்செய்யும். தலையில் உள்ள அழுக்குகள் போக வேண்டும் என்று தலைமுடியை அழுத்தி தேய்க்க கூடாது. இதனால் முடி வலுவிழந்து உதிர தொடங்கிவிடும். ஷாம்பு போட்டு குளித்த பின்னர் கண்டிப்பாக கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். முடி வறண்டு போகாமல் இருக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் இதை பயன்படுத்துவது அத்தியாவசியமானது. ஆனால் நம்மில் பலரும் கண்டிஷனர்களை உபயோகிப்பதில்லை.

bathing-benefits

நம் உடலை துடைக்க பயன்படுத்தும் துண்டு அல்லது துணியை வைத்து தலைமுடியை துடைக்க கூடாது. தலையை துவட்ட தனியாக ஒரு மென்மையான துணி எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தலைமுடியை தேய்த்து குளிப்பது நல்லது. அப்போதுதான் அதிலிருக்கும் அழுக்குகள் நீங்கப்பெறும். குளித்தவுடன் துவட்டும் பொது மென்மையாக துடையுங்கள். அழுத்தி துடைப்பத்தால் சருமத்தில் உள்ள ஈரப்பதம் வெளியேறி வறட்சி ஏற்படும். உடலுக்கு போடும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. மேலும் ஷாம்பு இல்லை என்பதற்காக சோப்பை தலைமுடிக்கு பயன்படுத்த கூடாது. முகத்தில் எப்போதும் கொஞ்சம் எண்ணெய் பசை இருக்க வேண்டும். எனவே அடிக்கடி முகம் கழுவக்கூடாது. தினமும் 2 அல்லது 3 முறை முகம் கழுவலாம்.