Highrise

நினைத்தது ஒன்னு நடந்தது வேற ஒன்னு! காமெடியா தெரிஞ்சாலும் உருப்படியான ஒரு விஷயத்தை கண்டுபிடித்து உலகத்தையே மாற்றியவர் தான் இந்த அதிசய மனிதர்!

Jun 09 2021 11:40:00 AM

கூடைப்பந்து விளையாட்டு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் மிகப்பிரபலமானது. கால்பந்தை போலவே உலகின் பல நாடுகளிலும் விளையாடப்படும் விளையாட்டாக மாறிவருகிறது கூடைப்பந்து விளையாட்டு. இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு மிகவும் வித்தியாசமானது. எதையோ கண்டுபிடிக்க நினைத்து எதிர்பாராத விதமாக அது இப்படி ஒரு விளையாட்டை கண்டுபிடிக்க வைத்தது.

basket-ball

இந்தியாவை தேடி கப்பலில் புறப்பட்ட கொலம்பஸ் பாதை மாறிச்சென்று அமெரிக்காவை கண்டுபிடித்தார். அதேபோலத்தான் கூடைப்பந்து என்ற விளையாட்டும் உலகத்திற்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவரால் தான் இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

basket-ball

இவர் ஒரு விளையாட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர் மனிதர்களை உயரமாக மாற்றுவதற்கு ஒரு கருவியை கண்டுபிடிக்கப்போகிறேன் என்று தான் முதலில் கூறி வந்தார். பழக்கூடை ஒன்றில் குள்ளமான மனிதர்களை குதிக்க வைத்து பந்தை வீசச்சொன்னார். கூடையில் குதித்து பந்தை வீசுவதால் குழந்தைகள் தங்களுடைய கை மற்றும் கால்களை நீட்டி விளையாடும்போது அவர்கள் உயரமாக வளர்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நினைத்து இப்படி ஒரு முறையை அறிமுகப்படுத்தி வைத்தார். நாளடைவில் அது மாற்றமடைந்து கூடைப்பந்து விளையாட்டாக மாறியது.

basket-ball