#LoadBearing: புதிதாக வீடுகட்டும்போது கவனிக்க தவறுபவை! மறக்காம உங்க எஞ்சினியர்கிட்ட இதெல்லாம் கேளுங்க!
  • 18:42PM Oct 09,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 18:42PM Oct 09,2019 Chennai

நீங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துத்திருந்தால் கண்டிப்பாக  இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். முதலில் உங்களிடம் எவ்வளவு கைஇருப்பு உள்ளது,  எவ்வளவு வரை செலவு செய்யலாம் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். குறைந்தது மூன்று பில்டர்களிடம் Quotation பெற்றுக்கொள்வது சிறந்தது. அந்த Quotation இல் என்னென்ன உள்ளது என்பதை உங்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளர்களை கொண்டோ அல்லது கூகுளில் தேடியோ தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். 

குறைவாக பட்ஜெட் உள்ளது என்பதற்காக யாரையும் எளிதாக தேர்தெடுத்து விடாதீர்கள்.அவர்கள் இதற்கு முன் கட்டிய வீட்டை ஒரு முறை விசிட் செய்யுங்கள்.முடிந்தால் அந்த ஹவுஸ் ஓனரிடம் வீட்டுவேலைகள் குறித்து விசாரியுங்கள். சிவில் துறையை பொறுத்தமாட்டில்  இரண்டு வகையான அமைப்புகளில் வீடுகள் கட்ட படுகின்றது. Load Bearing, இது நமது பாரம்பரிய முறை தான். அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் போட்டு அதன் மேல் சுவர் எழுப்பி கடைசியில் கூரை Concrete அமைக்கும் முறை. தற்போது பெரும்பாலும் இந்த முறை கட்ட படுவதில்லை.

அடுத்து Framed Structure, மிக பெரிய வணிக வளாகங்கள்,மால்கள் , அடுக்கு மாடி குடியிருப்புகள் அனைத்தும் இந்த முறையை பயன்படுத்தி கட்டபடுகின்றன.இந்த முறையில்  நீங்கள் வீடு கட்ட செலவு கொஞ்சம் அதிகம் இருப்பினும்  இதன் பளு தாங்கு திறன் மிகவும் அதிகம்.வீடு கட்டும் முன் உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழல் மற்றும்  மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நன்கு ஆய்வு செய்வது இன்றியமையாதது. உங்களது  கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement,  சரியான விகிதத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

அடுத்து Architectural Drawings, வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்பதை கூறினால் எஞ்சினியர்  அதற்கு தகுந்தாற் போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். Structral Drawings, உங்களுடைய கட்டிடம் எவ்வளவு பளுவை தாங்கும்  என்பதை முன்கூட்டியே விளக்க கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்..  இந்த இரு வகையான வரைபடம் இன்றி  எந்த ஒரு  பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top