#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்!
  • 14:49PM Sep 18,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:49PM Sep 18,2019 Chennai

மொபைல் போன் திருட்டு போவது அல்லது எங்கேனும் தவற விட நேரிடும் போது இழந்த போனை எப்படி பெறுவது, முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற அடிப்படை தகவல்களை இந்த பதிவில் காணாலாம். இங்கு இழக்கப்படுவது வெறும் பொருளாக மட்டும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, செல்போனில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். 

#1. உங்கள் மொபைல் காணாமல் போகையில் முதலில் காவல் துறையிடம் சென்று FIR பதிவு செய்ய வேண்டும்.

#2. அடுத்ததாக தொலைத்தொடர்புத் துறைக்கு 14422 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். புகாரைத் தொடர்ந்து, அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் சில சோதனைகளை மேற்கொள்வார்கள்.  அதன் பின்னர் போன் ப்ளாக் செய்யப்படும்.

#3. யாராவது உங்கள் மொபைல் போனை, புதிய SIM CARD போட்டு உபயோகப்படுத்தினால், அந்த சிம் கார்டு சேவை வழங்கும் நிறுவனம் போலீஸிடம் அந்த கஸ்டமர் குறித்து தகவலைப் பகிர்ந்து கொள்ளும். 

#4. இதன் அடுத்த நடவடிக்கையாக மொபைலின் இருப்பிடம் குறித்த தகவல் கண்டறியப்படும். காணாமல் போன மொபைல் திரும்பக் கிடைத்துவிடும் வேளையில் பிளாக் செய்யப்பட்டதை நீக்கும் ஆப்சனும் உள்ளது.அதற்கான வழிமுறை https://www.ceir.gov.in எனும் தளத்தில் உள்ளது. 

#5. போனின் IMEI எண் பயன்படுத்தி, மேற்கண்ட இணையத்தளத்திலே புகார் தெரிவிக்கலாம். உங்களது IMEI எண் ஒரிஜினலா என்பதும் இங்கே அறிந்துகொள்ள முடியும்.  

#6. புகார் தெரிவித்த பிறகு புகாரின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும், இந்த சேவையைப் பெற ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

#KYM,  - Know Your Mobile என்ற இந்த செயலியை பயன்படுத்தி தற்போது மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் மட்டும் புகார் தெரிவிக்கலாம். மற்ற மாநிலத்தவர்கள் IMEI எண் தொடர்பான விபரங்களை மட்டுமே அறிந்து கொள்ளலாம்.  விரைவில்  இந்தியா முழுவதும் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.#youtube: யூடியூப் காணொளியில் இந்த அம்சத்தை பயன்படுத்தியது உண்டா? அட்ரஸ் பாரில் “ss” என்ற எழுத்தை மட்டும் மாற்றி பாருங்க, நடக்கறத கவனியுங்க!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top