அமெரிக்க உளவுத்துறையே களத்தில்.. உலக வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு பொம்மை..!
  • 13:39PM Mar 09,2019 England
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:39PM Mar 09,2019 England

your image

 

1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Mattel, In நிறுவனம் Barbie பொம்மையை அறிமுகப்படுத்தியது. வைரவிழாக் காணும் இந்தப் பொம்மை, 10 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, பொம்மைத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியது.

பொம்மைகளின் வரலாறு மனிதகுல வரலாற்றினுடனேயே தொடங்கிவிடுகிறது. தயாரிக்கப் பயன்படும் பொருட்களும், பொம்மைகளின் வடிவங்களும் தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளன. தயாரிக்கப்பட்ட பொம்மைகள் என்பவை செல்வந்தர்களின் குழந்தைகளுக்கானதாகவும், தொழிலாளர்களின் குழந்தைகள் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு விளையாடும் நிலையுமிருந்தது.

இருபதாம் நூற்றாண்டில் அத்தியாவசியச் செலவுகள்போக, மீதமிருக்குமளவுக்குக் கூலி உயர்ந்து, தயாரிக்கப்பட்ட பொம்மைகளை தொழிலாளர்களும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித்தர முடிந்ததால், பொம்மை ஒரு பெரிய தொழில்துறையாகவே வளர்ச்சியடைந்தது. கற்பதற்கு உதவும் பொம்மைகள் உட்பட பல பிரிவுகள் உருவாயின.

Barbie ஃபேஷன் பொம்மை வகையைச் சார்ந்தது. அதாவது குழந்தை தன் விருப்பத்திற்கேற்ப பொம்மைக்கு ஆடை அலங்காரம் செய்யலாம். பொம்மைக்கு அணிவிப்பதற்காக பலவகை உடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மிகப்பெரிய சந்தையாக உருவாக்கியதன்மூலம், பொம்மைச் சந்தையையே மாற்றியமைத்தது பார்பி.

1987இல் அனிமேஷன் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்கள், இசை ஆகியவற்றிலும் பார்பி நுழைந்தது. ஆடை அலங்காரம் மட்டுமின்றி, வாழ்க்கை முறை உள்ளிட்ட பலவற்றிலும் பார்பி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பார்பியின் மெலிந்த, கவர்ச்சிகரமான உடல்வாகைப் பெற, பெண் குழந்தைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பார்பி சிண்ட்ரோம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

  Mattel, In நிறுவனரான எலியட் ஹேண்டலரின் மனைவி ரூத், ஜெர்மனியில் விற்பனையாகிக் கொண்டிருந்த பில்ட் லில்லி என்னும் பொம்மையைப் போன்றே பார்பியை உருவாக்கினார். பார்பி என்பது அவர் மகளின் பெயரான பார்பாராவின் சுருக்கமே.

புதிய தொழில்நுட்ப பொம்மைகளை உருவாக்க, பெண்டகனில் பணிபுரிந்த ஒரு பொறியாளரை மேட்டல் நியமித்திருந்தது. அவர்தான் பார்பியை வடிவமைத்தார். ஜெர்மன் நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அந்த நிறுவனத்திடமிருந்து உரிமையை 1964இல் 21,600 டாலருக்கு மேட்டல் வாங்கியது.

#Barbie toys #gender #Mattel

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Barbie® (@barbiestyle) on

 

 

 

Share This Story

முருகானந்தம்

Top