GST TAX: ATM, CHEQUE – BANK-ஐத் திரும்பிப் பார்த்தாலே காசு கேட்பாங்க போல!!!
  • 17:25PM Dec 01,2018 Chennai
  • Likes
  • Views
  • Shares

ஏற்கெனவே நம்ம ஊரு BANK-ல எல்லாம் எதுக்குக் காசு பிடுங்கறாங்கன்னே தெரியாது. போன மாசம் என் ACCOUNT-ல இருந்து திடீர்னு 118 ரூபாயை பிடித்தம் செஞ்சிருக்காங்க. என்ன கணக்குக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. அதாவது மாசம் 5 OTHER BANK TRANSACTION அனுமதிக்கப்பட்டிருக்கிறப்போவே இப்படி. இதுல இனி ATM, CHEQUE USE பண்ணினாலே கட்டணம்னு உத்திரவு போடப் போறாங்களாமா. இதுல விஷயம் என்னன்னு கேட்டா, BANK, CUSTOMER-களுக்கு கொடுக்கிற FREE SERVICE-களுக்கு GST TAX விதிக்க பெரும்பாலான BANKS ஒத்துகிட்டாங்களாமா. அதனால, இனி ATM, CHEQUE-ன்னு எதைப் போட்டாலும் காசு கொடுத்துத்தான் தீரனும். போற போக்கைப் பார்த்தா, இதான் BANK-ஆன்னு திரும்பிப் பார்த்தாலே காசு கேப்பாங்க போல. இதுல கதை வேற. கேட்டா, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு CHEQUE BOOK இலவசமாக கொடுக்கிறாங்களாமா. அதில்லாம, ACCOUNT வச்சிருக்கிற BANK-ஓட ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், மத்த BANK ATM-களில் மாRத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதிக்கிறாங்களாம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளான ATM, CHEQUE USAGE, PETROL, DIESEL SURCHARGE மற்றும் ADDITIONAL CREDIT CARD USAGE ஆகியவற்றுக்கு GST TAX கேட்டு INCOME TAX DEPARTMENT தரப்பிலிருந்து வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வந்துச்சு. இலவச சேவைக்கு எதுக்கு TAX-ன்னு நீங்க கேட்கக் கூடாது. அது தேசத் துரோகம். அதனால, வங்கிக் கணக்கில் MINIMUM BALANCE வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குக்கூட மேற்கூறிய சேவைகளுக்கு GST செலுத்த, பெரும்பாலான BANKS ஒத்துகிட்டாங்களாமா. அதே சமயம், அந்த வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது பற்றிப் பரிசீலிச்சிட்டிருங்காங்களாம். ஆனா, FREE SERVICE என்பது எது என்பதை ஒவ்வொரு BANK-ம் அவங்க வசதிக்கேற்ப முடிவு செய்யறதுங்கிறதால இந்த சேவைகளுக்கான கட்டணம் ஒவ்வொரு BANK-க்கம் மாறுமாமா. அது மட்டுமல்ல, இந்த வரி விதிப்புக்கு ஒத்துகிட்டாங்கன்னா, BANK-கள் அளிக்கும் மற்ற சேவைகளுக்கும் GST விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அடுத்ததாக வரக்கூடும்னு வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறதாம்.

இலவச சேவைகளுக்கான இந்த வரி விதிப்புக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே தேவையற்ற மோதல்களும் சிக்கல்களும் ஏற்படறதோட, இதே போன்ற NOTICE தொலைதொடர்புத் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போ கேட்க வேண்டியது ரெண்டு கேள்விதான். ஒண்ணு, இலவசமா குடுக்கிற பொருளுக்கு TAX கட்டனும்னு INCOME TAX DEPARTMENT ஏன் சொல்லனும். BANK-கள் வங்கியில் மற்ற சேவைகளைத் தவிர்த்துட்டு இதுக்கு மட்டும் GST கட்டனும்னு ஏன் சொல்லனும்??? ஆக மொத்தம் கொஞ்சம் கூடப் பைசாவை BANK-ல வைக்கவே கூடாதுன்னு சட்டம் போடனும் போல… ஆக மொத்தம் அது ஒண்ணுதான் மிச்சமிருந்துச்சு, அதையும் ஊத்தி மூடிட்டாங்க. மக்களுக்கு மறந்து போய்க் கூட நல்லது நடந்துடக் கூடாது இல்லை!!!

You Might Also Like These
Related Stories
Top