இந்தியாவில் காணாமல் போகும் 3 வாங்கிகள் : உங்க BANK-க்கும் இந்த லிஸ்டில் இருக்கா..?
  • 04:42AM Sep 18,2018 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 04:42AM Sep 18,2018 India

your image

 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாக தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

Image result for தேனா வங்கி

இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியும் கிடைத்துவிட்டது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி இணைவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக அது உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள நிதித் துறை செயலர் ராஜீவ் குமார்,

வங்கிகள் இணைவின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. தனியார் வங்கிக்கு நிகராக சேவை போட்டி போட்டு சேவை வழங்கி வரும் வங்கிகள் இணைவதால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. இதற்கு முன்னர் பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைந்த போதும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த வகையில் தற்போது இணைய இருக்கும் பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கியும் இணைவுக்கு பிறகு மிகச்சிறப்பாக செயல்படும்' என்று கூறியிருக்கிறார்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top