BANK STRIKE: நாளையிலிருந்து இரண்டு நாட்களுக்கு BANK STRIKE. கையிருப்பைக் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க!!!
  • 20:34PM Jan 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:34PM Jan 07,2019 Chennai

மூன்று வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் AITUC, CITU, AIUTUC, INTUC உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இரண்டு நாட்களுக்கு வங்கி பணிகள், ATM சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கைவிட வலியுறுத்துவதுடன் 12 அம்ச கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சுமார் 11 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

BANK OF BARODA வங்கியும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக MUMBAI STOCK EXCHANGE-க்குத் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக PUBLIC SECTOR வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து IDBI, BANK OF BARODA, ALLAHABAD BANK ஆகிய வங்கிகள், MUMBAI STOCK EXCHANGE-க்கு அறிக்கை அனுப்பியுள்ளன. அதில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், வங்கிச்சேவை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த மாதம் 21, 26ஆம் தேதி இரு நாட்களில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோடிக்கணக்கிலான வங்கிப் பரிவரித்தனை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, TUCC, LBF, SEWUA என மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால், அவசர வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய உள்ளவர்கள் இன்று மாலைக்குள் ATM-மில் பணம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. வரவர யாருக்குப் பிரச்சினை என்றாலும் பாதிப்பென்னவோ நம் தலையில்தான் விடிகிறது!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top