Lushgreen

அப்படிப்போடு இது அட்டகாசமான தகவலா இருக்கே! எப்போ துவங்கப்போகிறது இந்த கடந்த கால பயணம்?

Jul 30 2021 12:11:00 PM

இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய உச்சகட்ட பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இயக்கிய ஒரு அற்புதமான காவியம் தான் பாகுபலி. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் வரலாற்று கதையம்சத்தை கொண்டதாக விளங்கியது. பிரபாஸ், தமன்னா, ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படத்தின் கதாபாத்திரங்களை செதுக்கியிருந்தார் ராஜமவுலி.

bahubali-before-the-beginning netflix nayanthara-rajamadha

படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளின் பிரம்மாண்டம் மூலம் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தார் ராஜமவுலி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் மாஸ் ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தி சாதனை புரிந்தது பாகுபலி.

bahubali-before-the-beginning netflix nayanthara-rajamadha

இவ்வளவு பெருமைகளை கொண்ட பாகுபலி தற்போது வெப் சீரிஸாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மிக முக்கிய பலம் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் தான். எனவே சிவகாமி தேவியின் இளமைக்கால வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் தொடர் உருவாகவுள்ளது.

bahubali-before-the-beginning netflix nayanthara-rajamadha

இந்த வெப் தொடரில் நடிக்கும் நடிகைகளுக்கு இது மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமாதா சிவகாமி தேவியின் இளமை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒப்புதலும் கிடைக்கவில்லை.

bahubali-before-the-beginning netflix nayanthara-rajamadha

நடிகை கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் இந்த தொடர் எடுக்கப்படவுள்ளதால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று முடிவு செய்து தனக்கு இந்த வாய்ப்பு வந்த உடனே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஓகே சொல்லிவிட்டார் என்று கோலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜமாதா கதாபாத்திரத்தில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நடிப்பாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.