#Surprise தெரியாமல் செய்த மெசேஜூக்கு, பரிசுடன் வந்த அந்நியர்கள்!
  • 17:21PM Aug 16,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:21PM Aug 16,2019 Chennai

நமக்குத் தெரிந்தவர்கள் மெசேஜ் செய்தலே அதனைக் கண்டுகொள்ளமாட்டோம், ஆனால் யாரென்று தெரியாதவர்கள் செய்த மெசேஜிற்கு ரிப்ளை செய்தது மட்டுமின்றி, அவர்களை நேரில் சென்று பார்த்து பரிசு கொடுத்தார்கள் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினருக்கு நடந்துள்ளது. Lindsey மற்றும் Mark Lashley இருவருக்கும் இந்த வருடம் வாழ்க்கையில் மறக்கமுடியாத வருடமாகும்.

#Solah Shringar: மணப்பெண்ணுக்கு முடி முதல் அடி வரை பதினாறு வகையான பாரம்பரிய ஒப்பனைகள்!!!

Lindsey மற்றும் Mark Lashley-வுக்குச் சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. Lindsey-வுக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டதால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்குத் தகவல் கொடுக்காமல் Lindsey-வை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். Mark-ன் தாய் Teresa, குழந்தை பிறந்ததைச் சொந்தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத் தனது மொபைலில் இருந்த அனைவர்க்கும் டெக்ஸ்ட் மெசேஜ் செய்துள்ளார். அப்போது Teresa மொபைலில் தவறாகச் சேவ் செய்யப்பட்டிருந்த Dennis Williams மொபைலுக்கும் இந்த மெசேஜ் சென்றுவிட்டது. இதனைப் பார்த்த Dennis Williams, குழந்தை பிறந்தது மிக மகிழ்ச்சியான செய்தி, ஆனால் நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

#Peacock: மயிலுக்கு கூட 'லவ்' பீல் வருமா? தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க!

இதை Teresa கவனித்தும், குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையின் அட்ரஸ், ரூம் நம்பர் என அனைத்தையும் தெரிவித்துள்ளார். அதன்பின் மீண்டும் Dennis Williams தன்னைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும் தான் பரிசுகளுடன் வருவதாகவும் தெரிவித்துள்ளார். Dennis Williams விளையாட்டுக்கு அப்படிச் சொல்கிறார் என்று நினைத்து Teresa விட்டுவிட்டார். ஆனால் அந்தக் குடும்பத்தினருக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக Dennis Williams மற்றும் அவரது சகோதரர் Lindsey மற்றும் Mark Lashley-வை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பரிசு கொடுத்துள்ளனர். இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top