#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்? வாங்க,80-களுக்கு போகலாம்??
  • 23:39PM Sep 21,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:39PM Sep 21,2019 Chennai

அப்பா,அம்மா,மகன்,மகள் வாழும் நடுத்தர குடும்பத்தின் கதை,அப்பாவாக விசு, அம்மாவாக K.R. விஜயா, மகளாக இளவரசி.தரகர் கூறியபடி மகளுக்கு பெண் பார்க்க செல்லும் விசு, மாப்பிள்ளை வீட்டில் அரைகுறை ஆடையுடன் மலையாளம் பேசும் பெண் மற்றும் அவளது அண்ணன் (அண்ணனாக சந்திராசேகர்)  இருவரும் விசுவை வரவேற்கவே, வீட்டின் உள்ளே இருக்கும் இயேசுவின் புகைப்படத்தை பார்த்து திகைக்கிறார் விசு. ஏனெனில் இவர் இந்து. மாப்பிளையான கார்த்தி உள்ளே வருகிறார்.தான் இந்து என்றும் தானும் நண்பனான சந்திரகேகரும் நெருங்கிய  நண்பர்கள் என்றும் கூறுகிறார்.கார்த்தியின் தாயார்  இறந்துவிடவே கார்த்தி நண்பர் வீட்டில் வளர்கிறார்.  இதனாலே கிறிஸ்துவரான சந்திரகேகரும் அவளது தங்கையுடன் தான் வசிக்கிறேன் என்பதை விசுவிடம் கூறுகிறார். இவர்கள் பழகும் எதார்த்தத்தை பார்த்த விசுவிற்கு மாப்பிளையை மிகவும் பிடித்து விடுகிறது.

நடந்தவற்றை வீட்டில் சொல்கிறார், விசுவின் மனைவியான K.R. விஜயா, மகள், மகன் ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றனர்.வரதட்சணை வேண்டானு கூறும் மாப்பிள்ளையா? ஏதாவது குறை இருக்குமா? நண்பருடன் வாழ்கிறாரா? வீட்டில் ஒரு பெண்ணா? என்றபடி ஆயிரம் கேள்விகள் வரவே,அனைத்தையும் சமாளிக்கிறார் விசு.ஒரு வழியாக திருமணமும் முடிந்தது.

மனைவியை வசதியாக வாழ வைக்கிறார் கார்த்தி. காஸ்லியான புடவை, நகை என மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். விசுவும் K.R. விஜயாவும் புதுமண தம்பதிகளை பார்க்க வரவே மாப்பிள்ளை மகளுக்காக 42 ரூபாய்க்கு புடவை வாங்கி வருகிறார்கள் விசுவும் அவரது மனைவியும். வீட்டில் பார்த்தால் காஸ்லியான புடவைகள் நிரம்பியிருக்கு. மாப்பிளை ஏழை வீட்டு சீரை ஏற்றுக்கொள்வாரா என கொண்டுவந்த சீரை மறைக்கிறார் விசு.இதனை கண்டுபிடித்த கார்த்தி மாமா எனக்கு வாங்கி வந்த வேட்டி எங்க? உங்க அன்பு போதும், விலை அவசியமில்லை என்கிறார். ஒருவாரம் மாமனார் மாமியார் மாப்பிள்ளை வீட்டிற்கு முறுக்கு சீடை என பலகாரம்செய்துகொண்டுவர, அடுத்த வாரம் மாப்பிள்ளையும் மகளும் மாமனார் வீட்டிற்கு செல்ல படம் முழுவதும் கலகலப்பு மட்டுமே     

அடுத்த பாதியில் கார்த்தி திடீரென மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.இதை அறிந்த நண்பரான சந்திரசேகர்  கார்த்திகே தெரியாமல் கார்த்திக்கு மருந்து தருகிறார். இதை அறிந்த கார்த்தி,மாத்திரை கவர் மூலம் தனக்கு ஏற்பட்ட வியாதி குறித்து தெரிந்துகொள்கிறார்.இதற்கு மருந்தே இல்லை, இறப்பே இறுதியானது என மருத்துவர் கூற தன் மனைவிக்கு வாழ்நாளில் பண குறையே வராதவாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். இறுதியாக தன் மனைவிக்கு கடிதம் ஒன்றையும் எழுதுகிறார். தான் இறந்தபிறகு இதனை தன் மனைவியுடம் கொடுக்கும்படியும் நண்பரான சந்திரசேகரிடம் தருகிறார். 

கார்த்தி, சந்திரசேகரிடம் என் இறப்பிற்கு பின் புருஷனாக இருந்து என் மனைவிக்கு தாலி காட்டுவாயா என கேட்க, பதிலுக்கு சந்திரசேகர் அண்ணனாக இருந்து தாரை வார்த்து கொடுக்கும் என மலையாளத்தில் கூறுவது ஒரு நிமிடம் கலங்க வைக்கிறது.தல தீபாவளிக்கு மகளை அழைக்க வந்த விசு மகளையும் சந்திரசேகரின் தங்கையையும் முன்னரே அழைத்து செல்கிறார். அப்போது தங்கை கார்த்தி மனைவிக்கு எழுதிய கடிதத்தை தன் அண்ணியான கார்த்தியின் மனைவியிடம் கொடுக்கவே அவளுக்கு கார்த்திக்கு உள்ள வியாதி குறித்து தெரிய வருகிறது. கணவனுக்கு முன்னரே செல்ல வேண்டும் என எண்ணி,அரளி விதையை அரைத்து குடித்து  விடுகிறார். அடுத்த நாள் தீபாவளி, அந்த குடும்பத்திற்கு இருளாக அமைந்தது! கிளைமேக்சில் கார்த்தியின் வியாதிக்கும் மருந்து கண்டுபிடித்து விடுகிறார்கள். இறுதியில் என்ன ஆனது? சற்றும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ்..! பார்த்தாலே அதன் சுவாரஸ்யம் புரியும்  

நடிகர்,இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட விசுவின் படைப்புகளை விரும்பாதவர்களே இருக்க முடியாது.எக்காலத்தவரும் ரசிக்கும் வண்ணம் கிண்டல்,நக்கல்.1980 களிலே அப்படியொரு ஹீமர் சென்ஸ் நிறைந்த படங்களை தந்த பெருமை விசு அவர்களையே சேரும். இவரது பெரும்பாலான படங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளான டவ்ரி கொடுமை,கணவன் மனைவி இடையே புரிந்து கொள்ளுதல் இல்லாமை,குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை மையமாகவே கொண்டதாக இருக்கும்.அந்த வகையில் 1985 இல் வெளியான 'அவள் சுமங்கலிதான்' படம்தான் மேற்கண்ட கதை. அந்நிய மதம்,அந்நிய மாநிலம் கொண்டவராக இருப்பினும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே வீட்டில் வாழும் எதார்த்தத்தை கொடுத்த நட்பு.  பெண் கொடுங்க போதும்,வரதட்சணை வேண்டாம் என கூறுவதெல்லாம் 80களில் அரிதே! மாமியார் மாமனாரை அப்பா அம்மாவாக பார்க்கும் புரிதல். ஏழையாக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் கொண்டாடும் பெரிய மனது கொண்ட மாப்பிள்ளை. இத்தனை அம்சங்களும் நிறைந்த வாழ்க்கை இப்போதும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top