#SMARTPHONE: ஒருவாட்டி முட்டினா கொம்பு முளைக்காதாம், MOBILE PHONE-ஐ நோண்டிட்டே இருந்தாத்தான் முளைக்குமாம்!!!
  • 16:09PM Jun 27,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:09PM Jun 27,2019 Chennai

TITLE-ஐப் பார்த்ததும் இது ஏதோ புரளி அல்லது PRANK-ன்னு நிறையப் பேரு நினைக்கலாம். ஆனால், உன்மையில், இதுதான் நிஜம். நம்மில் நிறையப் பேரு MOBILE PHONE-லிருந்து கண்களைக் கூட எடுக்கிறதில்லை. காலையில் எழுந்திருச்சதும் முதல் வேலையா MOBILE-ஐத் தேடி MSG பார்க்கிறதில ஆரம்பிச்சு, ராத்திரி தூங்கப் போற நேரத்துல பாட்டுக் கேட்கிற வரைக்கும் எல்லாமே MOBILE-தான். இதனால் ஏற்படுற நேரடி விளைவுகள் சில நேரம் மரணம் வரைக்கும் போயிருக்கு. விளையாடிட்டே ஓடி, பாட்டுக் கேட்டுட்டே நடந்து ACCIDENT-ல மாட்டிக்குறதுல இருந்து, PUBG விளையாடி கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கதை வரைக்கும் நடந்திருக்கு.

ஆனாலும், நாம இன்னும் இன்னும் MOBILE-க்கு அடிமையாகிட்டேதான் வர்றோமே தவிர, வெளி உலகத்தைக் கவனிக்கிறது கூட இல்லை. இதை ஆராய, AUSTRALIA நாட்டில், QUEENSLAND-லுள்ள, UNIVERSITY OF THE SUNSHINE COAST-ல் படிக்கும் மாணவர்கள், PROFESSOR-கள் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அப்போத்தான் ADDICTION-ஐயும் தாண்டி, உடல் உறுப்புகளே மாறுகிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதான், கொம்பு முளைக்கிற கதை. நம் உடல் ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிணாம வளர்ச்சிக்கேற்ப தேவையில்லாததை நீக்கவும், உருவாக்கவும் PROGRAM செய்யப்பட்டது. நமக்கு வால் இல்லாமப் போன கதையும் அதுதான், இப்போ கொம்பு உருவாகும் கதைதான்.

அதிகப்படியான MOBILE பயன்பாடு இருக்கும் நபர்கள் நீண்ட நேரம் குனிந்தபடியே இருப்பதால், இதைச் சமண் செய்ய தலைக்குள் ஒரு சிறு எலும்பு ஒன்று உருவாக ஆரம்பித்திருக்கிறதாம். இது கழுத்து எலும்புகளுக்கான முட்டு மாதிரின்னு சொன்னாலும், மண்டைக்குள் புதிதான ஒரு எலும்பு தோன்றுவது விளையாட்டு ஒன்றும் அல்ல. அது நிரந்தரமானதாக மாறிவிடும். காலப்போக்கில் முதுகு வளைந்து, அந்த எலும்பு பெரிதாகி வெளியே தெரிய ஆரம்பித்துவிடும். காரணம், இன்றைய நம் உடலுக்கு, அதுதான் தேவை என்று நாம் SIGNAL கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இனியாவது கொஞ்சம் பயன்பாட்டைக் குறைத்து, வெளியுலகத்திற்கும் நேரம் கொடுக்காவிட்டால், நாமே ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்க்க வேண்டி வந்தாலும் வரலாம். திருந்துவோமா???

Australian Lotto Jackpot  |  Uber Submarine Tour  |  Pink Lake of Australia  |  Finger Pow Charging Station  |  Unified Payments Interface  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top