Shoreline

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் பகை மட்டும் மாறாது பங்காளி! சொல்லி வைச்சு கில்லி மாதிரி அடிச்சோம் பாத்தியா?

Jul 23 2021 12:27:00 PM

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாட்டின் கிரிக்கெட் அணிகளும் கிட்டத்தட்ட இந்தியா பாகிஸ்தான் போன்று வரலாற்று சிறப்புமிக்க அணிகளாகும். இருவரும் எப்போதும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல ஒருவரையொருவர் போட்டிகளில் வீழ்த்தும் போது அதை பெரிய திருவிழா போல கொண்டாடுவர்.

australia-vs-england 100years-victory

இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் தொடர் உலகப்புகழ் பெற்றதாகும். இவர்கள் மோதும் போட்டிகளுக்கு எப்போதும் பலத்த வரவேற்பு இருக்கும். மேலும் பரபரப்புக்கும் பஞ்சம் வைக்காமல் இரு அணி வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு வெ*றித்தனமாக விளையாடுவர். இவர்களிடையே நடந்த ஒரு போட்டியில் அரங்கேறிய ஒரு அதிசயமான சாதனையை பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்.

australia-vs-england 100years-victory

1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டும் ஒரு டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த இரண்டு அணிகளும் 1977ம் ஆண்டு ஒரு போட்டியில் மோதின.

australia-vs-england 100years-victory

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அ*திர்ச்சி அளித்தது. 100 வருட இடைவெளியில் நடந்த இரண்டு போட்டியிலும் சரியாக 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தானே.