Shoreline

சரண்டர் ஆகலாம் அதுக்குன்னு இப்படி ஒரேடியா விழுந்தா என்னங்க அர்த்தம்? 5 நாளில் முடிய வேண்டியதை எவ்வாறு 5 மணி நேரத்தில் முடிச்சிருப்பாங்க?

Jul 15 2021 06:33:00 PM

வரலாற்றில் கண்டிப்பாக இந்த சாதனை எப்போதும் முறியடிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஒரு நாள் போட்டியை விட வேகமாக முடிந்த ஒரு டெஸ்ட் போட்டி தான் இன்று நாம் பேசப்போகும் விஷயமாகும். 1932ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளுக்கான டிக்கெட் உங்களிடம் இருந்திருந்தால் கட்டாயம் நீங்கள் ஏமாற்றமடைந்திருப்பீர்கள்.

australia south-africa test-cricket

ஐந்தாவது நாள் வரை ஏன் செல்ல வேண்டும் இரண்டாம் நாளுக்கான டிக்கெட் கூட வேஸ்ட் தான். ஏனெனில் முதல் நாள் ஆட்டம் முடிவடைதற்கு முன்பே போட்டி முடிவடைந்து விட்டது. வெறும் ஐந்து மணி நேரம் 53 நிமிடங்களில் முடிந்து போன இந்த டெஸ்ட் போட்டிதான் உலகில் அதிவிரைவில் முடிந்த டெஸ்ட் போட்டியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

australia south-africa test-cricket

இந்த அற்புதமான போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 153 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை குறைந்த ரன்களுக்கு சுருட்டி விட்டோம் என்று இறுமாப்புடன் இருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

australia south-africa test-cricket

தென்னாப்பிரிக்கா அணி 36 மற்றும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் பெர்ட் அயர்ன்மொங்கர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை சாய்த்தார். உலகப்புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இவ்வளவு வேகமாக போட்டி முடிந்தது பல ச*ர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த வினோதமான சாதனை சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது.