Shoreline

நாம நினைச்சதை விட முற்றிலும் நேர்மாறா இந்த இடம் இருக்கே! இவ்வளவு வெப்பத்தை எப்படி தாங்க முடியும்?

Jun 14 2021 08:14:00 AM

ஆஸ்திரேலியா நாடு தனக்குள் ஏகப்பட்ட மர்மங்களை ஒளித்து வைத்திருக்கிறது. அதில் பல மர்மங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் உள்ளது. ஆஸ்திரேலியா ஒரு குளிர்ச்சியான நாடு என்று தான் நாம் அனைவரும் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். அதில் தவறில்லை. ஒரு சில குளுமையான இடங்களும் இந்த கண்டத்தில் உள்ளது.

australia-latest

ஆனால் நாம் எதிர்பார்த்திராத அளவுக்கு வெப்பமும் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு சில இடங்களில் இருக்கிறது. இங்குள்ள New South Wales பகுதியில் உள்ள மலை ஒன்று வித்தியாசமாக காணப்படுகிறது. இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் இந்த மலைப்பகுதி கிட்டத்தட்ட 6000 வருடங்களாக இந்த நிலையில் தான் இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

australia-latest

அதாவது மற்ற மலைகளை போல அல்லாமல் இந்த மலை முற்றிலும் எரிந்த நிலையில் காணப்படுகிறது. மனிதர்கள் யாரும் இந்த மலையை தீ யிட்டு கொ ளுத்தவில்லை. இது இயற்கையாகவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மலைக்கு அடியில் இருக்கும் அதிகமான வெப்பநிலை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்திலிருந்து 100 அடி ஆழம் வரை இந்த வெப்பத்தை உணர முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப்பகுதியில் இருக்கும் அளவுக்கு அதிகமான வெப்பத்தின் காரணமாகத்தான் இந்த மலைப்பகுதி மட்டும் எரிந்த நிலையில் இருக்கிறது.