Shoreline

மில்லியன் கணக்கில் இந்த நாட்டிற்கு படையெடுக்க அப்படி என்ன காரணம்? உலகத்துல எத்தனையோ நாடுகள் இருக்கும்போது இந்த நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு என்ன நடந்தது?

May 26 2021 08:35:00 AM

கொரோனா பிரச்சனை வருவதற்கு முன் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகளை பற்றித்தான் இப்போது நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். இதைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொரோனா அலைகள் ஓய்ந்த பிறகு நீங்களே இந்த நாட்டுக்கு நேரில் சென்று பார்த்து உங்கள் முடிவை கூறலாம். ஆஸ்திரேலியா ஒரு அழகான நாடு. இங்கு ஏகப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றது.

australia-latest

உலகில் சுற்றுலா செல்ல உகந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு தோராயமாக 9 முதல் 10 மில்லியன் மக்கள் இங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர். இதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காருக்களை காண்பதற்காகவும், இங்குள்ள தட்பவெட்பத்தை அனுபவிப்பதற்காகவும் நிறைய மக்கள் இங்கு வருகின்றனர்.

australia-latest

இங்கு சுற்றுலாவுக்கு வரும் மக்கள் இந்த நாட்டை பற்றி புகழ்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இங்கு வாழும் மக்கள் தான். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மக்கள் யாவரும் சுற்றுலா பயணிகளிடம் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியா வந்து செட்டில் ஆக விரும்புகின்றனர். இதற்கு காரணம் நல்ல திறமையான வேலையாட்களுக்கு இங்கு நல்ல சம்பளமும் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதாம். இதனால் தனிக்கண்டமாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்ற நாடுகளை காட்டிலும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.

australia-latest