Shoreline

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்காக கங்காரு ஏன் அழைக்கப்படுகிறது? கங்காருவை தேசிய விலங்காக அறிவிக்க இப்படி ஒரு வித்தியாசமான காரணம் இருக்கோ?

Apr 17 2021 03:44:00 PM

இந்திய நாட்டின் தேசிய விலங்கு புலி. இந்தியாவைப் போன்று உலகில் உள்ள நிறைய நாடுகளில் வேட்டையாடும் விலங்குகளையே தேசிய விலங்காக அறிவித்துள்ளார்கள். ஆனால் இவற்றில் ஆஸ்திரேலியா நாடு மட்டும் சற்று வித்தியாசமானது.

kangaroo national australia

ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு பாலூட்டும் விலங்கான கங்காருவை தேசிய விலங்காக கொண்டுள்ளார்கள். ஆஸ்திரேலியா நாடு என்று சொல்வதை விட பல தீவுகளை உள்ளடக்கிய கண்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களை விட அங்கு வாழும் கங்காருவின் எண்ணிக்கை தான் அதிகம்.

kangaroo national australia

இந்த கணக்கெடுப்பை வைத்துப் பார்த்தால் நம்ம ஊரில் எப்படி தெருவுக்குத் தெரு நாய் சுற்றுகிறதோ அதே போலத்தான் அங்கே கங்காரு சுற்றும் போல. ஆனால் அந்த விலங்கை மக்கள் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

kangaroo national australia

கங்காரு எப்போதும் முன்னோக்கி செல்லும் பழக்கம் கொண்ட விலங்கு. கங்காருவால் பின்னோக்கி நடப்பது கடினமான விஷயம். கங்காருவைப் போல ஆஸ்திரேலியா நாடும் எப்போதும் முன்னோக்கி நகர வேண்டும் என்றுதான் கங்காருவை தேசிய விலங்காக ஆஸ்திரேலியா நாடு அறிவித்துள்ளது.

kangaroo national australia