Shoreline

இவ்வளவு நீளமான மைதானமா? இதுல விளையாட நிறைய பயிற்சி வேணுமோ? இந்த ஊருல அடிச்ச பந்து அடுத்த ஊருல போய் விழும் அளவுக்கு பெருசா இருக்கே!

May 28 2021 11:13:00 AM

கிட்டத்தட்ட கிரிக்கெட் மாதிரியே இருக்கும் ஒரு விளையாட்டு தான் கோல்ப். கிரிக்கெட்டை போன்றே இந்த விளையாட்டிலும் பந்தை அடிப்பது தான் வேலை. ஆனால் என்ன பந்து சற்று சிறியதாக இருக்கும். பேட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். கிரிக்கெட்டில் பந்தை மைதானத்திற்கு உள்ளே வெளியே எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம். அது சிக்ஸ், போர் என்று ரன்களாக போகும் சில சமயம் கேட்ச் செய்து அவுட்டாக்கி விடுவர்.

golf-ground

கோல்ப் விளையாட்டில் கேட்ச் பிடிக்கும் பீல்டர்கள் எல்லாம் கிடையாது. பந்தை நீங்கள் தூரமாக உயரமாக அடிக்கலாம். அதுக்காக உங்களுக்கு கோப்பை எதுவும் குடுக்க மாட்டார்கள். கோல்ப் விளையாட்டில் பந்தை சரியாக குழிக்குள் தள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த விளையாட்டு பிரபலம் இல்லை என்றாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் மிகப்பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது.

golf-ground

கோல்ப் விளையாட்டை பொறுத்தவரை எப்போதும் சற்று பெரிய மைதானம் தேவைப்படும். ஆனால் இவ்வளவு பெரிய மைதானம் தேவையா என்றும் நமக்குள் ஒரு சந்தேகம் எழுகிறது. ஆஸ்திரேலியாவில் உலகிலேயே  மிகவும் அதிக நீளம் கொண்ட கோல்ப் விளையாட்டு மைதானம் இருக்கிறது. இங்குள்ள ஐரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோல்ப் மைதானம் அமைந்திருக்கிறது. Nullarbor Links என்ற பெயரால் இந்த கோல்ப் மைதானம் அழைக்கப்படுகிறது.

golf-ground

தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா இரண்டையும் இணைக்கும் ஐரி தேசிய நெடுஞ்சாலை சுமார் 1,365 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் Nullarbor Links கோல்ப் மைதானம் மொத்தமாக 18 குழிகளையும்(Holes), 72 par golf courseம் கொண்டுள்ளது.