Shoreline

அவனவன் எப்படியெல்லாம் யோசிச்சிகிட்டு இருக்கான்! இவனுங்க என்னடா இன்னும் குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கானுங்க! இதை நீங்க கலைக்கண்ணோடு பார்க்கணுமாம்!

May 22 2021 08:43:00 AM

ஆஸ்திரேலியா ஒரு வித்தியாசமான நாடு என்று கூறுவதில் தவறில்லை. இதற்கு காரணம் இங்கிருக்கும் சில வித்தியாசமான விஷயங்கள். ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளது. இந்த சிற்பங்கள் யாவும் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.

australia-statues

சிற்பங்கள் அமைத்துள்ளதில் அப்படி என்ன பெரிதாக வித்தியாசம் என்று நினைக்க தோன்றலாம். கலைநயம் மிக்க படைப்புகளாக இருந்தாலும் சற்று விசித்திரமான சிற்பங்களும் இருக்கத்தான் செய்கிறது. இங்குள்ள சிற்பங்கள் காளான், முதலை, எறும்பு போன்ற பல வடிவங்களில் இருக்கும். முதலை என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கத்தானே செய்யும். அந்த பயத்தை போக்குவதற்கு இந்த முதலை சிற்பம் நமக்கு உதவியாக இருக்கும். வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் வடிவில் கூட சிற்பங்கள் இங்கே உள்ளது.

australia-statues

வேடிக்கை தனத்தின் உச்சகட்டமாக வெண்ணை டப்பா வடிவத்தில் கூட கற்சிற்பங்களை உருவாக்கியுள்ளனர் என்றால் பாருங்களேன். இந்த சிற்பங்கள் யாவும் ஆஸ்திரேலியாவுக்கு  வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. உள்ளூர் மக்களும் அடிக்கடி இந்த சிற்பங்கள் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும் சிற்பத்தின் மேல் குழந்தை போல ஏறி அமர்ந்து கொண்டு விளையாடுவதும் வாடிக்கையாக உள்ளது.

australia-statues