மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் "பல்டி"..!! வாதத்திற்கு வலுசேர்க்கவே இப்படி ஒரு நடவடிக்கையாம்..
  • 13:19PM Mar 09,2019 Delhi
  • Written By AP
  • Written By AP
  • 13:19PM Mar 09,2019 Delhi

ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை கடந்த புதன்கிழமை முதல் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மீதான விசாரணையின்போது வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்பைடயிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பத்திரிக்கையாளர் என்.ராம் கட்டுரையில் வெளியாகியிருந்த ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருத வேண்டும் என்றும் அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆவணங்களை வெளியிட்டிருந்த பத்திரிக்கையாளர் என்.ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆவணங்களை கூட சரிவர பாதுகாக்க தெரியாத மோடி அரசு நாட்டை எப்படி பாதுகாக்குமென பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தன

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ரபேல் விமான தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை என கூறியிருந்தார். மேலும் அந்த ஆவணங்களை திருட்டுத் தனமாக நகல் எடுத்து அதன் வாயிலாக வழக்கு தொடர்ந்துள்ளளனர் என்றும் தெரிவித்தார்.இந்த வழக்கின் விசாரணையின்போது வாதத்திற்கு வலு சேர்க்கவே திருட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார். ரபேல் விசாரணையின்போது ஆவணங்கள் திருட்டு என கூறிவிட்டு, தற்போது நகல் எடுக்கப்பட்டு உள்ளது என கூறி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பல்டி அடித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Top