Exquisite

உலகின் மிக வறண்ட நிலப்பரப்பு எங்கு அமைந்துள்ளது? மனிதர்களே வாழமுடியாத அளவுக்கு இங்கே வெயில் வாட்டி எடுக்கும்!

Jun 11 2021 11:08:00 AM

சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனம் தான் உலகின் மிகப்பெரிய வறண்ட பகுதி ஆகும். சுமார் 1000 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பாலைவனம் தான் இந்த அட்டகாமா பாலைவனம். இங்கே மனிதர்களே உயிர் வாழ முடியாத அளவுக்கு வெப்பநிலையும், தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது.

sili attakama desert

இந்த பாலைவனத்தில் இதுவரை மலை பெய்ததே இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி தப்பித் தவறி மழை பெய்தாலும் அது வருடத்திற்கு 1மில்லி மீட்டர் கணக்கில் தன இருக்குமாம். 2016 ஆம் ஆண்டு கடைசியாக கனமழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

sili attakama desert

இந்த பாலைவனத்தில் இதுவரை மழை பெய்யாத சில இடங்களும் இருக்கின்றன. கிட்டத்தட்ட 500-1000 ஆண்டுகள் மழை பெய்யாத பகுதிகள் இந்த பாலைவனத்தில் இருக்கின்றன. இந்த பாலைவனத்தில் மனிதர்கள் வாழ்வது மிகவு க டினம் என்று சொல்லப்படுகிறது. பசுபிக் பெருங்கடலை ஒட்டிய சில உயிரினங்கள் இங்கே வாழ்வதாக சொல்கிறார்கள். இந்த பாலைவனத்தில் இருக்கும் நிலப்பரப்பு செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பைப் போலவே இருக்கிறது.

sili attakama desert