Timeless

அதிகம் அறியப்படாத அதிசய பிரதேசம் ஒன்று இந்த பூமியில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

Apr 16 2021 09:02:00 PM

தென் அமெரிக்காவில் உள்ள அட்டகாமா பாலைவனம் நமக்கு தெரியாத பல வியப்பூட்டும் தகவல்களை ஒளித்து வைத்திருக்கிறது. பூமியிலேயே மிக பழமையான பாலைவனம் என்றால் அது இந்த பாலைவனம் தான். இந்த பாலைவனமானது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

attagama-desert

சஹாரா பாலைவனத்தை விட பலமடங்கு வறண்டு காணப்படுகிறது அட்டகாமா பாலைவனம். இந்த பாலைவனம் பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரமாக இருக்கும் இது 1000 கிலோமீட்டர் நீளமும் 1,28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த பாலைவனத்தில் ஒரு பகுதியில் ஆண்டிஸ் மலைத்தொடரும் மறுபக்கத்தில் பசிபிக் கடற்கரையும் இருக்கிறது.

attagama-desert

இந்த பாலைவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு மணல் குவியலை அதிகமாக பார்க்க முடியாது. இங்கு இருப்பதெல்லாம் உப்பு படுகைகளும், எரிமலை குழம்பின் படிமங்களும் தான். பாலைவனத்தில் சராசரியாக எப்போதும் 50 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை காணப்படும். ஆனால் இந்த அட்டகாமா பாலைவனத்தின் சராசரி வெப்பநிலை வெறும் 18 டிகிரி செல்சியஸ் மட்டுமே என்பது ஆச்சர்யமாக உள்ளது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால் வருடத்தில் கிட்டத்தட்ட 330 நாட்களுக்கு வானத்தில் மேகங்களையே பார்க்க முடியாது.