#ATMSHOCKER: திடீர் என மக்களுக்கு வரம் தந்த ATM!!! வாரி வழங்கிய பணத்தை அள்ளிக் கொண்டு போகக் கூடிய மக்கள் கூட்டம்!!!
  • 20:45PM May 18,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:45PM May 18,2019 Chennai

வேலூர் மாவட்டம், S.R. GATE பகுதியில் NATIONALISED BANK-ன் ATM CENTRE உள்ளது. இதில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக அந்த ATM MACHINE-ல் CARD-ஐப் போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5,000 வந்தது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ATM CENTRE முன்பு குவிந்தனர். பலர் ATM MACHINE-ல் குறைவான தொகையைக் குறிப்பிட்டு, அதிகமான பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பொதுநலவாதிகள் சிலர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதை அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், TOWN போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ATM CENTRE வாசலில் இருந்த காவலாளியிடம் ATM CENTRE-ஐ மூடச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது COMPUTER-ல் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்களாம்.

COMPUTER-ல் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இது போன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்ததோடு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். COMPUTER ENGINEER-களும் குறிப்பிட்ட ATM CENTRE-கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ, இன்றைக்கு நிறையப் பேருக்கு JACKPOT அடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். வங்கியிலிருந்து எப்படி இதைச் சரி செய்யப் போகிறார்களோ!!!

Snakes in ATM  |  ATM Robbery Mishap  |  Q.R.Card  |  Water ATM  |  ATM Cash Crunch  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top