#MadhubalaMandal பெயர் குழப்பத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த அசாம் ஆசிரியை!
  • 16:40PM Jun 27,2019 Assam
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:40PM Jun 27,2019 Assam

பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் ஆசிரியர் ஒருவரை தவறுதலாகக் கைது செய்து மூன்று வருடம் சிறையில் அடைத்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அசாம் மாநிலத்தின் கோல்கஜார் பகுதியில் மதுபாலா தாஸ் என்பவர் இந்தியா குடியுரிமை இன்றிச் சட்டவிரோதமாக வசித்து வருவதாகக் கோல்கஜார் காவல் முகாமுக்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து கோல்கஜார் பகுதியில் வசித்துவந்த மதுபாலா மண்டல் தாஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுபாலா மண்டல், கோல்கஜாரில் பிறந்து அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவரது கணவரின் கடைசிப் பெயர் தாஸ் என்று முடியும். இவரது பெயரை மட்டுமே கேட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் மதுபாலாவை கைது செய்துள்ளனர். மதுபாலாவின் உறவினர்கள் மற்றும் சில குழுவினர் கடந்த இரண்டு வருடங்களாக மதுபாலாவின் விடுதலைக்காக வாதிட்டு வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மதுபாலாவின் பான்கார்டை பயன்படுத்தி விசாரணை நடத்திய வெளிநாட்டினர் தீர்ப்பாயம், அவர் இந்தியா குடியுரிமை பெற்றவர் என்றும், காவல் துறையினர் தவறாகக் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தது.

அந்த விசாரணையில் கோல்கஜார் கிராமத்தில் மதுபாலா என்ற பெயரில் 3 பெண்கள் இருப்பதும், கைது செய்யவேண்டிய மதுபாலா தாஸ் மற்றும் அவரது கணவர் மக்கன் நாமா தாஸ் இருவரும் 2016-ம் ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டதையும் தெரிவித்துள்ளனர். விசாரணை அதிகாரியின் தவறுதலால் காரணமின்றி மதுபாலா 3 வருடம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது தெரியவந்தது. மதுபாலாவை தவறுதலாகக் கைது செய்த விசாரணை அதிகாரிகளை அசாம் காவல் துறையினர் தண்டிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மதுபாலாவின் சிறைக்குக் காரணமான அதிகாரிகள் சிறைத்தண்டனை பெற வேண்டும் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top