Lushgreen

நாலு வருஷமா கண்டுக்காம விட்டுட்டு உலகக்கோப்பை போட்டி என்றவுடன் இவருமேல திடீர் அக்கறை காட்டுவது ஏன்?

Sep 11 2021 05:22:00 PM

இந்திய கிரிக்கெட் அணியின் மிகைத்திறமையான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். 34 வயதாகும் இவர் ஒரு காலத்தில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என்று அனைத்துவிதமான போட்டிகளிலும் கலக்கிக்கொண்டிருந்தார். ஆனால் பல காரணங்களால் கடந்த 4 வருடங்களாக அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் அஸ்வின்.

ravi-ashwin white-ball-come-back

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்து வருகிறார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அஸ்வின் அவர்களுக்கு எதிராக மிகச்சிறந்த சராசரியும் வைத்துள்ளார்.

ravi-ashwin white-ball-come-back

கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் அஸ்வின் மிகச்சிறப்பாக பந்து வீசி வருகிறார். பல சர்வதேச வீரர்களும் அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்து விடுகின்றனர். அதிலும் அஸ்வின் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதால் அதற்கு மேல் எதிரணி வீரர்களால் ரன் குவிக்க முடிவதில்லை.

ravi-ashwin white-ball-come-back

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் அவரது சமீப கால ஐபிஎல் பந்துவீச்சு உலகக்கோப்பை தேர்வுக்குழுவை இவர் மீது கவனம் செலுத்த வைத்துள்ளது. கொரோனா காலமாக தடைபட்ட ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் உலகக்கோப்பை போட்டிகளும் அமீரகத்தில் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கிருக்கும் பல ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ravi-ashwin white-ball-come-back

மோசமான பார்மில் உள்ள சஹால் மற்றும் குலதீப் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றே பல கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சாதிப்பாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.