#ASHOKLEYLAND: தொடர் சிக்கலில் மாட்டும் ASHOK LEYLAND!!! தப்பிப் பிழைக்குமா இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம்???
  • 10:52AM Nov 10,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 10:52AM Nov 10,2019 Chennai

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒருகாலத்தில் LORRY, BUS என்றாலே ASHOK LEYLAND-தான். அத்தனை தூரம் பிரசித்தி பெற்ற இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான ASHOK LEYLAND சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு BUS, HEAVY DUTY VEHICLE-கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் JULY – SEPTEMBER QUARTERLY-க்கான RETURNS விவரங்கள் நேற்று வெளியானது. SEPTEMBER 30-ம் தேதி நிறைவடைந்த QUARTERLY-ல் ASHOK LEYLAND நிறுவனத்துக்கு ரூ.38.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டு கிடைத்த லாபத்தை விட 92.6% குறைவாகும். அப்போது ரூ.527.7 கோடி லாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருந்தது.

ஏற்கெனவே, ECONOMIC CRISIS-ல் மாட்டிக் கொண்டு, LAY-OFF-ல் ஈடுபட்டு வந்த ASHOK LEYLAND-க்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் வாயிலான INCOME 48.4% வீழ்ச்சி அடைந்து, ரூ.3,929 கோடியாகக் குறைந்துள்ளது. விற்பனையைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டின் JULY – SEPTEMBER மாதங்களில் 44% வீழ்ச்சி கண்டு மொத்தம் 28,938 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. MEDIUM மற்றும் HEAVY DUTY VECHICLE-கள் விற்பனை 56%, LIGHT VEHICLE-கள் விற்பனை 11% வீழ்ச்சி கண்டுள்ளன. OCTOBER மாதத்தில் 35% வீழ்ச்சி கண்டு இந்நிறுவனம் மொத்தம் 9,857 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அது மட்டுமல்ல IT RETURNS விவரங்கள் வெளியான பின்னர், SHARE MARKET-ல் ASHOK LEYLAND நிறுவனத்தின் பங்குகள் 0.13% வீழ்ச்சியடைந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.76.60 ஆக இருக்கிறது. தொடர் சரிவுகளில் தொடர்ச்சியாகச் சிக்கிக் கொண்டு வருவது, இந்த நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்று மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. பழம்பெரும் நிறுவனங்களைக் காப்பாற்றப் பொறுப்பேற்று ஆவன செய்ய வேண்டியோ மத்திய அரசோ, ECONOMIC CRISIS பற்றிப் பேசக் கூடத் தயாராக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், ASHOK LEYLAND என்பது ஆரம்பப்புள்ளிதான். ஏற்கெனவே, COGNIZANT முதற்கொண்டு IT நிறுவனங்களில் கூட, LAY-OFF-கள் ஆரம்பித்துவிட்டன. இனி ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய, ECONOMIC CRISIS-லிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட ஏற்படவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா???

Fitness Diet  |  Neilson Report  |  Buying Potential  |  Economic Crisis  |  Parle Lay-Off  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top