பட்ட மேற்படிப்பை முடிக்காமல் எம்ஃபில்..?? போன தேர்தலில் பண்டிதர் ,இப்போது பாமரர்..??
  • 23:09PM Apr 13,2019 Delhi
  • Written By AP
  • Written By AP
  • 23:09PM Apr 13,2019 Delhi

லோக்சபா எலெக்க்ஷனில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஸ்மிருதி இராணி தான் பட்ட படிப்பு ஏதும் படிக்கவில்லை என வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் கடந்த 2014 இல் நடந்த எலெக்ஷனில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி அப்போது தன்னுடைய வேட்புமனுவில் பட்டதாரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த தேர்தலில் பட்டதாரி என குறிப்பிட்டவர் இப்போது தான் பட்ட படிப்பு ஏதும் படிக்க வில்லை என கூறுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்தவகையில் காங்கிரஸ் தரப்பில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன..

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது , தனது கல்வி விபரங்களையும் குறிப்பிட்டு இருந்தார்..அதில் ,1995 இல் லண்டன் டிரிட்டினி கல்லூரியில் எம்ஃபில் பட்டத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை சுட்டிக்காட்டி அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் , பட்ட மேற்படிப்பையே முடிக்காத ராகுல்காந்தி எப்படி எம்ஃபில் முடித்திருக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்மிருதி இராணியின் கல்வி விபரத்தில் சர்ச்சை நிலவவே, தற்போது ராகுலின் கல்வி விபரத்திலும் குழப்பம் நிலவுகிறது.தேர்தல் ஆணையம் தான் கண்விழிக்க வேண்டும்..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top